உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் அரசியலுக்கு வரவேற்பும், எதிர்ப்பும்!

விஜய் அரசியலுக்கு வரவேற்பும், எதிர்ப்பும்!

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொள்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன; தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று(அக்.,27) தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடந்தது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. மாநாட்டில் பேசிய விஜய், ''நம்பி வருவோரை அரவணைப்பது தான் எங்களின் பழக்கம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zpxrxyzq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எங்களை நம்பி, 2026 சட்டசபை தேர்தலில் களம் காண வருவோருக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு வழங்குவோம்' என தெளிவாக கூறிவிட்டார். தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொள்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது.

காங்., வரவேற்பு

'ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது' என சமூகவலைதளத்தில் காங்., எம்.பி., மாணிக்கம் தாக்கூர் பதிவிட்டுள்ளார்.

அ.தி.மு.க., எதிர்ப்பு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: 'விஜய் மாநாட்டால் அ.தி.முக.,வுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அ.தி.மு.க.,வின் கொள்கையும் தான். தி.மு.க., ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் கூடிய கூட்டமாக விஜய் மாநாடு இருந்தது. தமிழகம் தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளதை மாநாடு காட்டியது'. இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகர் அப்பாவு

' ரஜினி அரசியலுக்கு வராததால் பா.ஜ.,தான் விஜய்யை இறக்கியிருக்கிறதோ என சந்தேகம் எழுகிறது. வருமான வரி சோதனையில் சிக்கிய போது, விஜய்க்கு ஆதரவாக தி.மு.க.,தான் குரல் கொடுத்தது' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சர், ரகுபதி

விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை; பா.ஜ.,வின் C டீம்: த.வெ.க., மாநாடு, பிரம்மாண்ட சினிமா மாநாடு. அ.தி.மு.க., தொண்டர்களை ஈர்க்கவே அக்கட்சி குறித்து பேசாமல் தி.மு.க., குறித்து விஜய் பேசியுள்ளார். எங்கள் கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பதால் கவர்னரைப் பற்றி பேசியுள்ளார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ராம.ஸ்ரீனிவாசன், பா.ஜ.,

விஜயின் மாநாடு வெற்றி தான். ஆனால் அரசியல் வெற்றி அடையாது. ஒருநாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
அக் 28, 2024 22:33

தடி எடுத்தவனெல்லாம் தண்டற்காரன் ஆவான் என்பது போல உள்ளது. ஆக முடியாது. கட்சி ஆரம்பித்தவெனெல்லாம் ஆட்சி அமைக்க முடியாது தம்பி.


வைகுண்டேஸ்வரன்
அக் 28, 2024 21:20

யார் சார் அஞ்சலை அம்மாள்? யாரைத் திருப்திப் படுத்த அவரோட கட் அவுட். எனக்குத் தெரிந்த 14 விஜய் ரசிகர்கள் கிட்ட கேட்டுட்டேன். ஒருத்தனுக்கும் தெரியல. இதில் பாதிப் பேர் இன்னும் வாக்காளர் அட்டை கூட வாங்கவில்லை. ஒருத்தன் சொல்றான், "சார், ஆதார் கார்டு வெச்சு ஓட்டு போடலாம்" என்கிறான். தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தில் பதிவிடவிட்டால் ஓட்டு போட முடியாது என்று சொன்னாலும் தெரியல. விஜய் அவர்களால் ஒரே ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. எந்த தொகுதியிலும் ஒருவரின் வெற்றி தோல்வி யைத் தீர்மானிக்கும் இடத்திலும் அவர் இல்லை.


ஆரூர் ரங்
அக் 29, 2024 10:49

அஞ்சலை அம்மாள் வேறு யாருமல்ல. திமுக எம்எல்ஏ எழிலன் இருக்காரே. அவரது பாட்டி. இப்போ சொல்லு. JOSEPH விஜய் யாருடைய B டீம்?


T.sthivinayagam
அக் 28, 2024 21:08

அண்ணாமலை சாரே தெவலாம்


தாமரை மலர்கிறது
அக் 28, 2024 19:11

விஜய் கொள்கை ராமசாமியின் திருட்டு திராவிட கொள்கைதான் என்று சொல்லிவிட்டார். மேலும் நீட்டை எதிர்க்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்கிறார். இதிலிருந்தே அவர் பிஜேபி எதிர்ப்பு ஓட்டுக்களை தான் வேட்டையாட போகிறார். பிஜேபி எதிர்ப்பு ஓட்டுகள் திமுகவின் ஓட்டுகள். மேலும் அவர் சாதாரண விஜய் இல்ல. ஜோசெப் விஜய். அதனால் மைனாரிட்டி ஓட்டுகளும் காலி. திமுகவிற்கு ஆப்பு வைக்க அமித் ஷா இயக்கும் படம் தான் தமிழாகவேற்றி கழகம் . திமுக ஓட்டுக்களை விஜய் பிரிப்பார் . அதிமுக ஓட்டுக்களை சீமான் பிரிப்பார் . பிஜேபியை அரியணையில் ஏற்றபோவது சீமானும் விஜய்யும் தான்.


என்றும் இந்தியன்
அக் 28, 2024 17:40

த - தண்டமான வெ - வெட்டி க-கலக்கம் என்று படியுங்கள்


என்றும் இந்தியன்
அக் 28, 2024 17:31

எம்ஜிஆர் நடிகர் வெற்றி ஜெயலலிதா நடிகை வெற்றி சிவாஜி, கமல், சிரஞ்சீவி, விஜயகாந்த்....நடிக பட்டாளம் ஒரு பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாமல் தோல்வி???ஏன்???எல்லோருக்கும் இந்துக்கள், டாஸ்மாக்கினாட்டில் திருட்டு திராவிடம் மட்டும் தான் வெற்றி பெறும் ஏனென்றால் இது தமிழகம் தமிழ்நாடு இல்லை இது குடிகாரர்கள் நிறைந்த திருட்டு திராவிட டாஸ்மாக்கினாடு. விஜய் வெற்றி பெற சான்ஸ் 40%???ஜோசப் விஜய், கிருத்துவன் ஆகவே கிறித்துவ ஒட்டு நிச்சயம் விஜய்க்குத்தான் Reverend Father கட்டளை தேவாலயத்திடமிருந்து வரம் இதற்காக. விஜய் ரசிகர்கள் பட்டாளம் வேறு இருக்கின்றது. ஆனால் நாட்டிற்கு என்ன நன்மை???ஒரு பைசாவிற்கு பிரயோஜனம் இருக்காது???ஏன்???ஏதோ சினிமா என்று நினைத்து ஒரு ஹீரோ 30-40 ரவுடிகளை ஓரு கையால் தூக்கி அடிப்பது போல நினைத்து செயல்படுவார்கள். அரசியல் வேறு சினிமா வேறு என்று இவர்களுக்கு புரிய உரைந்தது 5 வருடம் ஆகிவிடும். அதற்குள் டாஸ்மாக்கினாடு அதல விதல சுதல ரசாதல மஹாதல பாதாளத்திற்கு சென்றுவிடும். அது தான் நடக்கும்.


V Gopalan
அக் 28, 2024 17:00

Is it a sin Tamilnadu to have a continuously against learning additional language? Upto 1966, Hindi, Sanskrit were too taught in the High schools and this was given up the moment DMK is stepped in. Why at all these politicians are against the Students interest? It is for the student to choose and for further employment etc while studying. In almost all the States, Navodaya School is being run where the students learn on residential which is absolutely free of cost. In Karnataka, in most of the districts, Navodaya schools are functioning. Thought, being a tinsel world and whose business is all over India, will have the mainstream politics whereas he has shown business is different and for survival in Tamilnadu as a Political party is different. In case, any person goes to Parliament the politicians of North will speak in Hindi our politicians just remain numbh and not only that any one goes to employment to North, additional language is an added advantage. After all, the Malayalees wherever they go they mingle with local and speak the regional language including Hindi etc. again temples are spread over all around Tamilnadu but for the sake of vote bank politics, they play indifferently. It is very difficult to change the electorates of Tamilnadu.


Vijay D Ratnam
அக் 28, 2024 16:37

திடீரென்று வந்து ஆழம் தெரியாம தொபுக்கடீர்னு குதித்த கமல் மாதிரி இல்லாமல், குதிக்கப்போறேன்னு உதார் உட்டு பில்டப் கொடுத்துட்டு தாதா சாகேப் பால்கி விருது வாங்கிட்டு பேக் அடித்த தொடைநடுங்கி ரஜினி மாதிரி இல்லாமல், பார்த்துடலாம்னு ஒரு கைன்னு விஜயகாந்த் மாதிரி இறங்கி இருக்காரு விஜய். சினிமாவில் விஜயகாந்த்தை விட உச்சம் தொட்ட விஜய், லட்சக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். இன்றைய தேதியில் அரசியலில் முதல் அடி எடுத்து வைத்துள்ள விஜய் தனித்து களமிறங்கினாலே 12 - 15 சதவிகிதம் வாக்குகளை பெறுவார். இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கிறது. இவரால் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் பெரிதாக டைரக்ட் பாதிப்பு வந்துவிடாது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளை அண்டி பிழைக்கும் கட்சிகளுக்கு சேதாரம் உறுதி. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் இங்கே இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று வாய்ப்பு கிடைத்தால் பாய தயாராகுவார்கள். அதுபோல வாக்குகளை சேதாரப்படுத்த கோடிகளுக்கு கட்சி நடத்தும் சீமானின் நாம் தமிழர் கட்சி கடும் பாதிப்பு அடையும். டிடிவி.தினகரன், கமல்ஹாசன், வேல்முருகன் போன்ற லெட்டர் பேடு கட்சிகள் கரையும், காணாமல் கூட போகலாம். பாமகவின் கோட்டை எனப்படும் விக்கிரவாண்டியில் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துக்கு கிலி ஏற்படுத்தி இருக்கிறார். So, குடும்ப அரசியலால் வெறுத்து போயிருக்கும் பாமக இளைஞர்கள் விஜய் பக்கம் செல்ல வாய்ப்புகள் அதிகம். பிரேமலதாவுக்கெல்லாம் நோ சான்ஸ். தேமுதிகவை ஹோல்சேலாக கொள்முதல் செய்துவிடுவார் விஜய் என்றே தோன்றுகிறது. தமிழக பாஜக இதற்கு மேல் வளர வாய்ப்பில்லை. அங்கே புதுசா போனவிங்க புதுசு மாறாம ரிட்டர்ன் அடிப்பார்கள். எதிர்பார்த்ததை விட அதிகளவில் லட்சக்கணக்கில் கூடிய கூட்டம். அதில் மிக மிக முக்கியம் மாநாட்டுக்கு வந்த 95 சதவிகிதம் பேர் இளைஞர்கள் இளம் பெண்கள். பாஜக திமுக அண்டர் கிரவுண்ட் டீலிங்ஸ் வெட்டவெளிச்சம் ஆவதால் காங்கிரஸ் கட்சிக்கு அணி மாற இப்போ சாய்ஸ் உள்ளது. எம்ஜிஆரை புகழ்ந்த விஜய் அதிமுகவை பற்றி விமரிசிக்கவே இல்லை. அதிமுக விஜய் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்தால் இஸ்லாமிய கட்சிகளும் அந்த கூட்டணியில் இணைத்துக்கொள்ளும். அது மட்டும் நடந்தால் அதிமுக விஜய் காங் கூட்டணி 200 இடங்களை வெல்ல வாய்ப்பு அதிகம்.


Srinivasan Ramabhadran
அக் 28, 2024 16:26

கண் பார்வையற்ற 6 நபர்கள் ஒரு யானையின் ஒவ்வொரு பாகத்தை தடவி பார்த்து பின் அதற்கான விளக்கத்தை அவர் அவர்க்கு தெரிந்த வகையில் விளக்கம் கூறியது போல் இருக்கிறது


Suppan
அக் 28, 2024 16:25

அதிமுகவுக்கும் ஜன்னி கண்டுவிட்டது. என்னடா நம்ம கட்சி ரூட்டையே பிடிக்கிறார். நம்ம ஆளுங்களை இழுத்துவிடுவார் போலிருக்கிறதே. ஏற்கனவே தேய்ந்து வந்திருக்கும் கட்சியை இன்னுமொரு இடி தாக்குமா? அங்கேயே சேர்ந்துவிடலாம் என்றால் நான்தான் தலைமை தாங்குவேன் என்கிறாரே அப்போ எடப்பாடி என்னாவது? இதற்கு இரட்டைத்தலைமையே பரவாயில்லியோ ? ஒருவேளை ஓ பி எஸ் வகையறா அங்க போய் இருந்துட்டா என்னாவது ? இந்த விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களும் அங்க சேர்ந்திடுவாங்களோ ? மண்டை குழம்புதே ? திமுகவின் அலம்பல்: ஹேன் காச்ச மரத்துலதான் கல்லடிபடும்னு உதார் விட்டாச்சு. கூட இருக்கிற கட்சிங்க அங்க போனா என்ன செய்வது? இப்பவே அதிகாரத்துல பங்கு கொடுத்திடலாமோ? நம்ம ஆளுங்க பிச்சுக்கிட்டு போனா என்னாவது? ஹூன் அடிக்கிற வரைக்கும் அடிச்சுடுவோம் அப்புறம் ஒன்னும் கிடைக்காது . சரி. அப்ப நம்ம வேலைய காமிக்கவேண்டியதுதான். கேஸ் மேல கேஸ் போட்டுருவோம். நம்ம ஆளுங்கள காலத்துல இறக்கி கூட்டத்தை கலைச்சுடுவோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை