உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெயர் சூட்டும்போது நினைத்தது நிறைவேறிவிட்டது: சி.பி.ராதாகிருஷ்ணன் தாய் நெகிழ்ச்சி

பெயர் சூட்டும்போது நினைத்தது நிறைவேறிவிட்டது: சி.பி.ராதாகிருஷ்ணன் தாய் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ''முன்னாள் ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் போல் வரவேண்டும் என்று எண்ணி பெயர் வைத்தோம். இன்று அது நிறைவேறும் தருணம் வந்துவிட்டது,'' என்று துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் தாயார் தெரிவித்தார்.தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ug4b221s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தகவல் வெளியானதும் திருப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டில் அவரது தாய் ஜானகி அம்மாள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் கூறுகையில் , ''என் மகன் பிறந்த போது முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் வரவேண்டும் என ஆண்டவனை பிரார்த்தனை செய்து பெயர் வைத்தோம். இன்று அது நிறைவேறும் தருணமாக மாறி உள்ளது. நிச்சயம் துணை ஜனாதிபதி தேர்தலில் என் மகன் வெற்றி பெற்று தொடர்ந்து மக்கள் சேவையை செய்வார். இது திருப்பூருக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை கூட்டக்கூடிய தருணமாக அமைந்திருக்கிறது. என் மகன் சி.பி. ராதாகிருஷ்ணன் பெயரை பரிந்துரை செய்த பாஜகவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி,'' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Oviya Vijay
ஆக 17, 2025 23:13

அளந்து விடுவதற்கு ஒரு அளவில்லை... காசா... பணமா... அளந்து விடுங்கள்...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 18, 2025 01:11

முன்னாள் முதல்வரின் பேரன் மற்றும் இன்னாள் முதல்வரின் மகன் என்ற தகுதியே போதும் துணை முதல்வர் ஆவதற்கு என்று பழகி போன கொத்தடிமைகளுக்கு .... சிறிது சிறிதாக முன்னேறி இன்று துணை ஜனாதிபதி வரை உயர்ந்திருக்கும் ஒருவரின் தாய் கூறுவது.....சில கொத்தடிமைகளுக்கு அளந்து விடுவது போல்தான் இருக்கும்.... ஏனெனில் அவர்களின் டிசைன் அப்படி.....!!!


K V Ramadoss
ஆக 20, 2025 21:15

ஏனய்யா இப்படி ஒரு பொறாமை உமக்கு உண்மையில் இவர் பெயர் உப ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறார் என்ற செய்தி அறிந்தவுடன் நானும் நினைத்தேன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களைப்போல் இவரும் அடுத்த ஜனாதிபதியாகக்கூடும் என்று . நானே அப்படி நினைக்கையில் அவரது தாயார் நினைத்ததில் தவறேதும் இல்லை. வியப்பேதும் இல்லை.


எஸ் எஸ்
ஆக 17, 2025 22:49

தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்


GSR
ஆக 17, 2025 22:21

துணை ஜனாதிபதி தான் கட்டாயம் அடுத்த ஜனாதிபதி என்ற காலம் இப்பொழுது இல்லை. வந்தால் நல்லது, சந்தோஷமே.


K V Ramadoss
ஆக 20, 2025 21:16

ஆர்.வெங்கடராமன் அப்படி வந்திருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை