நெட்வொர்க் கட்டணம் என்றால் என்ன?
வீடு, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், கூரையில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, கட்டட உரிமையாளர் பயன்படுத்தியது போக, மீதியை மின் வாரியத்திற்கு விற்கலாம். அதை மின் வாரியம் வாங்குவதற்காக, அந்த உரிமையாளரிடம் ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே நெட்வொர்க் கட்டணம் ஆகும். நெட்வொர்க் கட்டணமாக தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு, 1.04 ரூபாயும், மற்ற பிரிவுகளுக்கு, 1.57 ரூபாயும் மின் வாரியம் வசூலிக்கிறது.