முதல்வரின் பதில் என்ன? :தினகரன் அறிக்கை
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில், பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இருவர், அதில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு, பாலியல் தொந்தரவு அளித்ததோடு, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே நாளில், கோவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ டிரைவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட, 15 வயது சிறுமி, திருச்சியில் பள்ளி தாளாளரின் கணவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவி, கடலுாரில் அடையாளம் தெரியாத நபர்களால், பாலியல் தொந்தரவுக்கு உள்ளான, 16 வயது சிறுமி என, அடுத்தடுத்து நடக்கும், பெண் குழந்தைகளுக்கு எதிரான, குற்றச் சம்பவங்களுக்கு, முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்.-தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்