உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு குறித்த சட்டசபை தீர்மானத்தால் என்ன பலன்? இபிஎஸ் கேள்வி

நீட் தேர்வு குறித்த சட்டசபை தீர்மானத்தால் என்ன பலன்? இபிஎஸ் கேள்வி

சென்னை: ‛‛ நீட் தேர்வு குறித்து 3வது முறையாக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்?''என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒன்றுதான்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்துகள், உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்று தான்- நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=moden5hn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நாடகம்

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் பார்லி.,யில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? இத்தீர்மானம் இந்த விடியா திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இதுபோன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை.

அதிமுக குரல்

நீட் தேர்வை பார்லிமென்ட் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற பார்லி கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜ கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுக.,வின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mani . V
ஜூன் 28, 2024 22:00

தமிழக மக்கள் காதில் பூ வைக்கலாமல்லவா? கருணாநிதி குடும்பம் தமிழகத்துக்குச் செய்யும் துரோகங்கள் கணக்கில் அடங்கா.


பேசும் தமிழன்
ஜூன் 28, 2024 20:22

0000000000.....ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை


K. Karthikeyan
ஜூன் 28, 2024 20:14

இவங்க இப்ப உண்ணா விரதம் இருந்து என்ன சாதிச்சாங்க......


Venkateswaran Rajaram
ஜூன் 28, 2024 18:46

நீ நீட் வேணும்னு சொல்றிங்களா இல்ல வேணாம்னு சொல்றீங்களா


MADHAVAN
ஜூன் 28, 2024 17:31

பழனிச்சாமி போன்ற ஒரு மூடர் இந்த தமிழகம் 4 வருடங்கள் முதலமைச்சராக ஆண்டது மிகப்பெரிய சோகம், நீட் என்பது வட மாநிலங்களில் உள்ள முட்டாள்களின் மருத்துவப்படிப்புக்காக, இங்கு உள்ள எள் மாணவர்களின் கனவுகளை தொலைக்க பிஜேபி கொண்டுவந்த சட்டம்,


பேசும் தமிழன்
ஜூன் 29, 2024 12:07

இந்த உலகத்தில் தான் இருக்கியா இல்லை வேற்று கிரகத்தில் இருக்கியா... நீட் தேர்வு கொண்டு வந்ததே காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் தான் .


தமிழன்
ஜூன் 28, 2024 17:27

அதான் மக்களை திசை திருப்பி விட்டாச்சு இல்லையா.. இனி கள்ளக்குறிச்சியை மறந்து விட வேண்டியது தான்.. அதுக்கு தானே இந்த தீர்மானம். தமிழக மக்களுக்கு அவமானம். திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் ஆட்சியை களைத்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு திமுக வெற்றி பெறட்டுமே.. திமுக பதவி விலக வேண்டும்.


Senthoora
ஜூன் 28, 2024 17:10

இதேதான் உங்க ஆட்சிக்காலத்திலும் கேட்டாங்க, ஏங்க, என்னத்த கிழிச்சீங்க, எப்படியோ இப்போ ஆச்சியை கலைக்கணும், ஆனால் மக்கள் முழு இந்தியாவுலயும் தெளிவாக இருக்கிறாங்க, மக்களுக்கு நல்லது செய்து அடுத்த முறை ஆட்சியை பிடிக்கப்பாருங்க.


P. SRINIVASALU
ஜூன் 28, 2024 16:45

இவரு ஒரு டம்மிபீசு . ஒண்ணுத்துக்கும் வேலைக்காகாது. admk அயிக்காம விடமாட்டார்


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 16:08

அதான் மச்சானை சுகாதாரத் துறை இயக்குனராக நியமித்து விட்டாரே. எனவே இனிமேல் நீட் நடக்காது. முதல் கையெழுத்தே தேவையில்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை