உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில்துறை வளர்ச்சி குறித்த அமைச்சரின் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன: அன்புமணி கேள்வி

தொழில்துறை வளர்ச்சி குறித்த அமைச்சரின் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன: அன்புமணி கேள்வி

சென்னை:ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழகத்தில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சர் வாக்குமூலம் குறித்து முதல்வரின் பதில் என்ன? என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:தொழிற்துறை வளர்ச்சியில் ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற பிற தென் மாநிலங்கள் அளவுக்கு தமிழகம் தீவிரம் காட்டவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தொழில்துறையின் வளர்ச்சி பிற தென் மாநிலங்களை விட குறைவாக இருப்பதாக அமைச்சர் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.மதுரையில் நேற்று நடைபெற்ற புது மதுரை 2035 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் ஆவணம், இலட்சினை ஆகியவற்றை வெளியிடுவதற்கான நிகழ்ச்சியில் பேசும் போது இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.அண்மையில் சட்டப்பேரவையில் பேசும் போது, டைடல் பூங்காக்களை அமைப்பது குறித்து அறிவிக்கும் அதிகாரம் தமக்கு அளிக்கப்படவில்லை என்று கூறினார்.தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை; தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன என்று பாமக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் தான் அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. அமைச்சரின் இந்த பேச்சு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஜூன் 19, 2025 00:55

தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் assignment கூடிய சீக்ரம் முடிவுக்கு வரும்.


sankaranarayanan
ஜூன் 18, 2025 19:21

இந்த அமைச்சர் விரைவிலேயே அமைச்சரவையிலிருந்து தானே விலகி. எதற்கு இந்த வில்லங்களெல்லாம் என்று நினைத்து விரைவில் அமெரிக்க சென்றுவிடுவாராம்


panneer selvam
ஜூன் 18, 2025 18:18

As Stalin ji lives in imagination surrounded by self-serving crones , nothing will be known to him . It is the curse of Tamilnadu


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை