உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த கட்டம் என்ன?: அண்ணாமலை தலைமையில் பா.ஜ., மையக் குழு கூட்டம்

அடுத்த கட்டம் என்ன?: அண்ணாமலை தலைமையில் பா.ஜ., மையக் குழு கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ.,வின் அடுத்த கட்டம் தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மையக் குழு கூட்டம் நடைபெற்றது.லோக்சபா தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு பாமக உள்ளிட்ட சில கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ., தேர்தலை சந்தித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ., கூட்டணி தோல்வியடைந்தாலும், பா.ஜ., ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதிமுக.,வுடன் கூட்டணி தேவையில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் துணிச்சலான முடிவால், பா.ஜ., வளர்ச்சி அடைந்துள்ளதாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.இந்த நிலையில் சென்னையில் உள்ள பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில், இன்று (ஜூன் 19) கட்சியின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகளான எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள், தோல்விக்கான காரணங்கள், கட்சியின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

lakshman
ஜூன் 20, 2024 15:26

விக்ரவாண்டியில் இறங்கி வேலை செயுங்கள்


Chandramoulli N
ஜூன் 19, 2024 21:17

Annamalai only sound party. nothing will happen . his post will be removed and sidelined very soon. BJP Delhi decision is totally different.


Seenu Krishnamurthy
ஜூன் 22, 2024 11:17

உங்களை போல் நிறைய பேர் இருக்கிறார்கள் பிஜேபி வரைந்த மாதிரி தான்


venugopal s
ஜூன் 19, 2024 20:05

நெக்ஸ்ட், ரெஸ்ட் தான் இன்னும் இரண்டு வருடங்களுக்கு, வேறு என்ன?


hariharan
ஜூன் 19, 2024 17:47

தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளியிடுவதாக இருந்த திமுக ஃபைல் என்ன ஆச்சு?


K.Ramachandran
ஜூன் 19, 2024 17:23

கட்சி செயல்பாடுகளை இன்னும் தீவர படுத்திங்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் DMK அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோவத்தை வக்குகளா அருவிடை செய்ய நல்ல தேர்தல் உத்தியை முடிவு செய்யுங்கள். 2026 இதோ வந்து விடும்


Palanisamy Sekar
ஜூன் 19, 2024 15:50

திட்டமிட்டு இந்த திராவிட கும்பல்களை அடியோடு அரசியலிலிருந்து நீக்கிட வேண்டும். தமிழகத்தில் எங்கோ மூலையில் சில இடங்களில் மட்டுமே தென்பட்ட கட்சிக்கொடியும் அண்ணாமலையும் பிரதமர் மோடிஜியும் கிராமந்தோறும் நன்கு தெரிந்துகொண்டுவிட்டனர். கூடுகின்ற கூட்டங்களையெல்லாம் அப்படியே வாக்குகளாக மாற்றிட பயிற்சிகொடுத்து பூத் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் ஊழல் பட்டியலில் பாகுபாடின்றி அதிமுக மீதும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே கொடுக்கப்பட்ட திமுக மீதான ஊழல்களையும் வெளிச்சம்போட்டு காட்டிட வேண்டும். மக்களுக்கு வேறு வழியே இல்லை. இரண்டு கட்சிகளுமே திருட்டு கட்சிக்காக புரிந்துகொண்டுவிட்டனர். அண்ணாமலை மீது பெரிய அளவில் மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அதனை வாக்குகளாக மாற்றிடும் வித்தையை மட்டும் கற்றுக்கொடுத்துவிட்டால் போதும் அடுத்த முதல்வர் நம் அண்ணாமலை அவர்கள்தான். சந்தேகமே இல்லாமல்.


அப்பாவி
ஜூன் 19, 2024 15:39

மறுபடியும் முதல்லேருந்து பாதயாத்திரைந்னு ஆரம்பிக்க வேண்டியதுதான்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 19, 2024 14:49

முதலில் பிஜேபி யோக்கியமான கட்சி என்பதை நிருபிக்கவெண்டும் ரவுடிகளையும் பிற கட்சியில் இருந்து வந்தவர்களை விலக்கிட வேண்டும் தனித்து போட்டியிட வேண்டும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 19, 2024 15:17

தமிழகத்தில் பிஜேபி தவிர அனைத்து கட்சிகளும் யோக்கியமான கட்சிகள். பிஜேபி தவிர வேறெந்த கட்சியிலும் ரவுடிகள் இல்லை இல்லவேயில்லை.


A Viswanathan
ஜூன் 19, 2024 15:23

EGO வை மறந்து 2026 ஆட்சியை பிடிக்க கூட்டணி வைத்து ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்து தழிழ் நாட்டு மக்களை காப்பாற்றுங்கள்.


மேலும் செய்திகள்