உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது; உதயநிதி சொல்வதை பாருங்க!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது; உதயநிதி சொல்வதை பாருங்க!

திண்டுக்கல்: 'தி.மு.க.,வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை, நீங்கள் தமிழையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. ஏதுவும் செய்ய முடியாது' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

திண்டுக்கல் திருமண விழாவில், உதயநிதி பேசியதாவது:

தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி நடந்து வருகிறது. நேரடியாக இந்தியை திணிக்க முடியாததால், தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் ஹிந்தியை உள்ளே கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பல பேர் துணை போகின்றனர். முதல்வர் ஸ்டாலின் செய்த செயலால், மண்ணை கவ்வி கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு பெயரை மாற்ற ஒருவர் முயற்சித்தார். ஆனால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மன்னிப்பு கேட்டார். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளனர். தி.மு.க.,வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை, நீங்கள் தமிழையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழகம் ஏற்காது. அதனை முதல்வர் ஸ்டாலினும் அனுமதிக்க மாட்டார்.

மகளிருக்கு ரூ. ஆயிரம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது என பலரும் கூறினார்கள். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ், இதுவரைக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.ஆயிரம் கொடுக்கப்படுகிறது. விடுப்பட்ட சிலருக்கும், கருணாநிதி உரிமை திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை வழங்க, முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து, வழங்குவார் என்ற உறுதிமொழியை நான் கூறுகிறேன். இவ்வாறு உதயநிதி பேசினார். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
அக் 21, 2024 21:33

தம்பி ஏற்கனவே அந்த நீட் தேர்வு ஒழிப்பு விவகாரத்தை மறந்துபோச்சு. இப்ப துணைமுதலவர் ஆனபின் அதைப்பற்றிய ஞாபகம் கூட இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் இதுபோன்ற தில்லாலங்கடிகளைத்தான் மக்கள் இன்னும் நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் முதலில் திருந்தவேண்டும்.


vikram
அக் 21, 2024 18:48

அது என்னது கருணாநிதி உரிமை தொகை உங்க சொந்த கோபாலபுரம்பணத்தில்யா கொடுக்குறீங்க?


vijai
அக் 21, 2024 18:46

கேவலமா இருக்கு தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு முட்டாளா நெனச்சிட்டு இருக்கியா


Smba
அக் 21, 2024 13:55

... பெயரிலும் குடுக்கலாம்


சமீபத்திய செய்தி