உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்று பொங்கிய போராளிகள் எங்கே?: இன்று கண் மூடி, வாய் பொத்தி மவுனம் காப்பது ஏன்?

அன்று பொங்கிய போராளிகள் எங்கே?: இன்று கண் மூடி, வாய் பொத்தி மவுனம் காப்பது ஏன்?

தமிழகத்தை காக்க வந்த ‛‛ஆபத்பாந்தவனாக''வும் அனாதை ரட்சகனாகவும் தங்களை நினைத்துக்கொண்டு, சென்ற அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு எதற்கெடுத்தாலும் கண்டன ‛‛கவுன்ட்டர்'' கொடுத்துக்கொண்டு இருந்த ‛‛மாண்புமிகு'' நடிகர்கள், இயக்குனர்கள், நாட்டுப்புற பாடகர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்?.தலைநகர் சென்னையில், நட்டநடு நகருக்குள், ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தின் வளாகத்திற்குள் ஒரு மாணவி மானப்பங்கப்படுத்தப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டு தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. நாகரீக சமுதாயம் என்று பீற்றிக்கொள்ளும் நாம் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது என்று தெரியாமல் விழிக்கிறோம்.பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகம் என்று இன்னொரு உருட்டையும் உருட்டிக்கொண்டு ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி இருக்கிறோம். ஈவு இரக்கம் இல்லாத ராட்சஷனைப் போல் நடந்துகொண்டு இருக்கிறோம்.அதிமுக ஆட்சியின்போது பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது, அதைக் கண்டிப்பதற்கு வரிசை கட்டிக்கொண்டு வந்தார்கள் இந்த சினிமா நடிர்களும் இயக்குனர்களும்.திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் இவர்களுக்கு கண்கள் தெரிவதில்லை, காதுகள் கேட்பதில்லை, மூளையும் சிந்திப்பதில்லை. இது ஒரு பட்டவர்த்தமான ஓரவஞ்சனை இல்லையா?. இவர்களுக்குப் பிடிக்காத கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டும், தாம் துாம் என்று ‛‛மைக்''குகள் தெறிக்க ‛‛சவுண்டு'' விடுவார்கள். பிடித்த கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன அநியாயம் நடந்தாலும் ஆழ்கடல் அமைதி காப்பார்கள்.நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சித்தார்த், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் பா.ரஞ்சித், நாட்டுப்புற பாடகர் கோவன், கானா பாடகி இசைவாணி போன்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?.‛‛திராவிடம்'' ‛‛தமிழ்ப்பற்று'', ‛ஹிந்தி தெரியாது போடா'' என்று வாய் கிழிய பேசும் இவர்களுக்கு பாதிக்கப்பட்ட பல்கலை மாணவியும் ஒரு தமிழச்சி என்பது மட்டும் மறந்து போகிறதே எப்படி?.இதில் இருந்து ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. இவர்களுக்கு தேவை, ‛‛பப்ளிசிட்டி''யும், புகழ் வெளிச்சமும் மட்டுமே. மொழி, இன வெறியை துாண்டிவிட்டு அதில் குளிர் காய்பவர்கள். அதன் மூலம் கிடைக்கும் விளம்பரத்தை வைத்து பணம் சம்பாதிப்பவர்கள்.திமுக ஆட்சியின்போது நடக்கும் குற்றங்களை கண்டிக்க திராணியவற்றவர்கள். அப்படி கண்டித்தால், தங்களைப் பற்றிய வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறி விடுமோ என்று அஞ்சுபவர்கள். ஒருவேளை தங்களது படம் ரிலீசாகாமல் போய்விடுமோ என்ற பயமா? அல்லது வடிவேலுவின் சினிமா வாழ்க்கை 7 ஆண்டுகள் முடங்கி போனது போல ஆகிவிடுமோ என்ற பயமா? இப்படி பயப்படுபவர்கள் எதற்காக தங்களை சந்தர்ப்பவாத போராளிகள் போல காட்டிக்கொள்ள வேண்டும்?இவர்களையும் தங்கள் ‛‛ஹீரோ''க்களாக நினைத்துக்கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் தான் பாவம். இந்த ஹீரோக்களின் முகமூடி மீண்டும் கிழிந்திருக்கிறது என்பதை இனிமேலாவது இந்த மக்கள் உணர்ந்துகொள்வார்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 131 )

கத்தரிக்காய் வியாபாரி
ஜன 24, 2025 22:27

வாயை 4 வருடம் விளக்கி துப்புரவாக வைத்து கொண்டிருகிறார்கள். அடுத்த 4 வருடம் அதுக்கு நிறைய வேலை இருக்கு


angbu ganesh
ஜன 21, 2025 12:33

அப்படி தீயமுக்கவுக்கு எதிர் கருத்து சொன்னா அடுத்த வேலை சாப்பிட முடியாது


angbu ganesh
ஜன 21, 2025 12:27

...எதுக்கு இந்த கேள்வி


Aravind
ஜன 19, 2025 19:43

இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக கூப்பாடு போடும் கேவலமான ஜென்மங்கள். பணத்திற்காகவும், தங்களின் சுயநலத்திற்காகவும் எத்தகைய செயல்களையும் கூசாமல் செய்யும் மனிதர்கள்...


C.SRIRAM
ஜன 17, 2025 21:35

கேவலமான மனித ஜென்மங்கள் அல்ல ஜந்துக்கள்


N Annamalai
ஜன 17, 2025 06:56

அவர்கள் போன் டேட்டா காலியாம் .முதல்வர் ரீ சார்ஜ் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல .நாட்டை பார்ப்பதை விட வேற வேலைகள் இருக்கிறது .


M Ramachandran
ஜன 13, 2025 12:55

அவர்களுக்கெல்லாம் இப்போர் அதி முக்கிய வேலை இருப்பதால் வேறு மாநிலத்தில் ஹிந்தி கற்று அதன் மூலம் காசு பாக்க முனைப்புடன் இருப்பதால் இப்போது வர இயலவில்லை. 2026 றிற்கு பிறகு வேறு ஆட்சி தமிழ் நாட்டில் காசு கட்டிலில் அமர்ந்த வுடன் இங்கு வந்து பந்தி பரப்பி விஷுவாசத்தைய்ய காட்டி அதற்குரிய சன்னாம்மானதை அவர்கள் எஜமானரிடம் பெற்று கொள்வார்கள். ரஜினி பரவா இல்லை MGR தோட்டம் நிகழ்வு ஞ்யாபகத்திலேயே இருக்கு முழுவதும் ஒதுங்கி விட்டார்


M Ramachandran
ஜன 13, 2025 11:50

மக்கள் திருந்த வேண்டும். வேறு என்னத்த சொல்ல. ஆம் மக்கள் தானே திருந்தாத ஜென்மங்கள். சேலம் கிழக்கு தொகுதியில் ஹி ஹி பைநிறைய பணம் தராங்க. யார் தருவார் தீ மு கா வைய்ய தவிர. எங்கள் காட்டில் மழை. இது போல் நிறைய மலை MLA சீட்டுகள் காலியாகணும் அப்போ தான் நாங்க ஸந்தோஷமா யிருப்போமுங்க.


M Ramachandran
ஜன 09, 2025 17:38

மாதவன் அவர்களெ கருத்து கூறும் முன் யோசனை செய்து விட்டு கூறுங்கள். அண்ணா யூனிவர்சிட்டி போல் கடந்த சில நாட்களில் பலப்பல வெட்க கேடனா நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளனா? ஆறிவுடையார் யாரும் இதை எண்ணி வெட்க படுவார்கள். இந்த ஆட்சியின் அவலங்கள். இத்தகைய்ய நிகழ்வு உங்களில் ஒருவருக்கு நடந்தால் அதன் வேதனை அறிய முடியும். இவ்வளவு மோசமாக எந்த காவல் குறையும் நீதி மன்றத்தால் கூட்டு வைக்கும் நிலைக்கு தள்ள பட்டிருக்க மாட்டார்கள். காரண மென்ன அந்த துறையாய்ய்ய நிர்வாகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர் முதல் அமைச்சர். எதிர் கட்சியில் அமர்திருந்தால் ராஜினாமா செய் என்று வாய் கிளிய கிளிய கத்துவார்


M Ramachandran
ஜன 09, 2025 17:25

தமிழாவது ஒண்ணாவது பொழைப்பைய்ய பாருங்கய்யா என்று ஓட்டம் பிடித்து விட்டனர். ஒருத்தர் பொண்டாட்டி சேலை பிடித்து கொண்டு மும்பயை சென்று குழந்தைகளினுடன் ஹிந்தி கற்று கொண்டிருக்கிறார் ஹிந்தி பட வாய்ய்பிற்க்கு. இன்னொரு வழுக்கை தலையர் வீராப்புடன் ரஜினியுடன் தான் நடிக்க மாட்டான் என்று கூறியிருந்தேன் தெலுங்கு பட வாய்ப்பிற்கு ஐராபாத்திகிற்கு சென்று விட்டார். இன்னொரு பாதி இளஞ்சர் பெங்களுருவில் கண்ணட பட த்திற்கு பிஸி யாகா வேலை. அதனால் இங்கு காண முடிவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை