உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாரை தாக்க தி.மு.க.,வுக்கு எங்கிருந்து வந்தது துணிச்சல்?

போலீசாரை தாக்க தி.மு.க.,வுக்கு எங்கிருந்து வந்தது துணிச்சல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'போலீசாரை தாக்கும் அளவுக்கு, தி.மு.க.,வினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை வேளச்சேரியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்க இருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கொண்டிருந்த காவலர் காமராஜை, மது போதையில் இருந்த தி.மு.க.,வினர் கடுமையாக தாக்கிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. போலீசாரை தாக்கும் அளவுக்கு, தி.மு.க.,வினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் போலீசார் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என, தமிழகம் முழுதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படாமல், போலீசாரின் கண்ணியம் காற்றில் பறக்க விடப்பட்டதால், போலீசார் மீது தி.மு.க.,வினரின் தாக்குதல் தொடர் கதையாகி இருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கின்றனர். சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கிய காரணம், காவல் துறையின் கைகளை கட்டி போட்டிருப்பதே. தற்போது, காவல் துறை மீது தொடரும் தி.மு.க.,வினரின் தாக்குதலுக்கு என்ன சொல்ல போகிறார், அந்த துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R.P.Anand
ஏப் 15, 2025 09:31

நல்லா பாருங்க அது வெளியே இருந்து வந்த குண்டர்கள் திமுக விருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அண்ணே ஆர், எஸ் பாரதி ஒரு அறிக்கைய போடு


vinoth kumar
ஏப் 15, 2025 05:26

அன்று கருணாநிதியின் அராஜகத்தை துணிச்சலாக எதிர்த்த ஒரே தலைவர் எம் ஜி ஆர் , இன்று ஸ்டாலின் அராஜகத்தை துணிச்சலாக எதிர்க்கும் ஒரே தலைவர் அண்ணாமலை. திமுகவின் அராஜகங்கள் அதிகமாகும்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களை காக்க எதாவது ஒரு தலைவனை ஆண்டவன் உருவாக்குகிறான்.


Tetra
ஏப் 15, 2025 12:12

வேலைக்கு ஆகாது.


Kasimani Baskaran
ஏப் 15, 2025 03:55

தீர்மானம் போடுவதில் அவர் பிசியாக இருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை