உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசிடம் வாங்கும் நிதி எங்கு தான் செல்கிறது? தமிழக அரசைக் கேட்கிறார் அண்ணாமலை

மத்திய அரசிடம் வாங்கும் நிதி எங்கு தான் செல்கிறது? தமிழக அரசைக் கேட்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எளிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களான பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன், பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் எங்கு தான் செல்கிறது?,' என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை; திருப்பூர் மாவட்டம், அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட கோடந்தூர் திருமூர்த்திமலை கிராமத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இன்று வாழவே முடியாத நிலைக்கு சிதிலமடைந்திருந்தும், வேறு வழியின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் வசித்து வருகிறார்கள் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள். வீடுகள் இடிந்து, மின்சார வசதி, சரியான குடிநீர் வசதி, முறையான சாலை வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக அவதிப்பட்டு வரும் மக்கள், அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கைகள் பல விடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தான் ஆச்சரியம். வருவாய்த்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு 110 வீடுகளைப் புதுப்பித்துத் தரப் பழங்குடியினர் நல ஆணையம், ஆதி திராவிடர் நலத்துறைக்குப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் நிலையில், ஒன்றரை வருடங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையோ, நிதியோ ஒதுக்கப்படவில்லை என்று மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கூறியிருப்பது மலைவாழ் மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் திமுக அரசிற்கு இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளது.2022ம் ஆண்டு வரை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் திருமூர்த்திமலை மக்கள், முதல் முறையாக வாக்களித்து தங்களில் ஒருவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து பஞ்சாயத்து மூலம் வீடுகளைப் புதுப்பிக்கத் தீர்மானம் நிறைவேற்றி காலங்கள் பல ஆகியும் அவர்களின் நிலைமை மாறவில்லை. எளிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களான பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன், பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதி எங்கு தான் செல்கிறது?உடனடியாக திருமூர்த்திமலை மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிட வேண்டும். மேலும், இது போன்ற, மற்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

venugopal s
ஜூலை 25, 2025 20:44

சி ஏ ஜி என்று சொல்லப்படும் மத்திய அரசின் கன்ட்ரோலர் அன்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா மாநில அரசின் செயல்பாடுகளை ஆடிட் செய்து வெளியிடும் அறிக்கையைப் படித்து மாநில அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளலாம் .


Mani . V
ஜூலை 25, 2025 14:58

பதில் தெரிந்து கொண்டே கேட்பது நன்றாகவா இருக்கிறது? பாஜக வின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சிதான் ஆட்டையைப் போட்டது என்று தெரியும்தானே?


babu
ஜூலை 25, 2025 14:33

உங்களை தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டார்களே...


Mettai* Tamil
ஜூலை 25, 2025 14:54

அண்ணாமலை அவர்கள் தலைவர் பதவியில் இல்லா விட்டாலும் , ஊழல் குடுமியை பிடித்து கேள்வி கேட்பார் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 25, 2025 18:58

> எந்த இந்தியக் குடிமகனும் தட்டிக் கேட்கலாம் .......


Raja k
ஜூலை 25, 2025 14:30

என்பது மத்திய அரசு நிதி தருகிறதா? மக்களின் கைகளில் இருக்கும் கொஞ்சநஞ்ச காசையும் சுரண்டர ஆட்கள்தானே உங்க மத்திய அரசு,, நீ அரசி கொண்டுவா, நான் உமி கொண்டு வருகிறேன் ரெண்டு பேரும் அதை கலந்து ஊதிஊதி சாப்பிடலாம்னு சொல்லுர உமி கொடுக்கற மத்திய அரசுதானே உங்களோடது, நீங்க நிதி கொடுக்கறேனு சொல்லுறது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய்,,


Mario
ஜூலை 25, 2025 14:27

அதெல்லாம் சரி முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.


vivek
ஜூலை 25, 2025 16:41

சரிங்க மணிப்பூர் மாரடிக்கும் மரியோ


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 25, 2025 14:10

ஒருநேர்மையான திறமையான போலிஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த அண்ணாமலை அண்னனுக்கு மத்திய அரசிடம் வாங்கும் நிதி எங்கு தான் செல்கிறது தெரியவிலை ..ஐயோ ஐயோ..ஒரு சின்ன குழந்தையை கேட்டல் கூட சொல்லிவிடும் அந்த நிதி மக்களுக்கு பயன்படும் வகையில் .. தனியார் மருதுவ மனைகளாகவும் , தனியார் பல்கலை கழகங்களாகவும் ..அரசியல் வாதிகளின் வீடுகளாகவும் ..அயல் நாடுகளில் முதலீடாகவும் ..மாற்றம் அடைத்து விட்டன ..


Rengaraj
ஜூலை 25, 2025 13:55

அரசியலில் கணக்கு வழக்கு சம்பவம் மூலம் பல பிரச்சினைகள் , பல திருப்பங்கள் நடந்திருக்கின்றன. உதாரணத்துக்கு எம்ஜிஆர் கருணாதியிடம் கணக்கு கேட்டதால் அதிமுக உதயமானது . இ பிஎஸ் முதல்வராக இருந்த நேரம் - ஓபிஎஸ் கட்சியின் பொருளாளர். அவர்கள் பிரிவினையும் கணக்குதொடர்பாக இல்லாமல் இருக்குமா ? அதன்தொடர்பாகத்தான் இருக்கவேண்டும். இப்போது அண்ணாமலை தமிழக அரசையே கேட்கிறார். இது தீவிரமாக தொடர்ந்தால் பல பூசல்கள், பிளவுகள், சண்டைகள், வழக்குகள் வரலாம்.


Madras Madra
ஜூலை 25, 2025 13:54

அய்யா சாமி நாங்க எப்படித்தான் ஜனநாயகத்தை கட்டி காப்பது ? இப்டி கேள்வி கேட்டா நாங்க எப்படி பதில் சொல்றது ?


தியாகு
ஜூலை 25, 2025 13:18

அண்ணாமலையை திட்டமிட்டு ஓரம் கட்டிய கும்பல் தமிழக பாஜகவில் இருக்கும்வரையில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட தேறாது. துக்ளக் குருமூர்த்தி, மாரிதாஸ் போன்றவர்கள் இருக்கும்வரையில் பாஜக தேறுவது கடினம்தான்.


Ramesh Sargam
ஜூலை 25, 2025 13:06

தமிழகம் முழுக்க கருணா-நிதிக்கு சிலைவைக்க அந்த நிதி செல்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை