உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிதம்பரம் கோவில் நிலம் 2,000 ஏக்கர் எங்கே?: தீட்சிதர்கள் மீது அறநிலையத்துறை குற்றச்சாட்டு

சிதம்பரம் கோவில் நிலம் 2,000 ஏக்கர் எங்கே?: தீட்சிதர்கள் மீது அறநிலையத்துறை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீட்சிதர்கள் விற்றதாகக் கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான, 2,000 ஏக்கர் நிலங்கள் குறித்த விபரங்களை, ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு, ஹிந்து அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக ஹிந்து அறநிலையத் துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களைச் சுற்றி, எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.கடந்த 2008 முதல் 2014 வரை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தது. அப்போது, கோவிலின் வருவாய் 3 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது.ஆனால், 2014ல் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் கோவில் வந்தபின், 2.09 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் என, வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். தவறான நிர்வாகத்தால் வருவாய் குறைந்துள்ளது.எனவே, கோவிலின் வரவு- செலவை தணிக்கை செய்ய கணக்குகளை சமர்ப்பிக்கும்படி, பொது தீட்சிதர் குழு செயலருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோவிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு- செலவு கணக்கு விபரம், மூடி முத்திரையிட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, 'வரவு செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்யாமல், வருமான வரி தாக்கலுக்காக தணிக்கை செய்த கணக்கு விபரங்களை தந்துள்ளது ஏன்' என, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பின், பொது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்கறிஞர் ஹரிசங்கர் வாதாடியதாவது:அதிக கணக்கு புத்தகங்கள் உள்ளதால், அதை தாக்கல் செய்வது சிரமம். கோவிலுக்குச் சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தை, அறநிலையத் துறையின் தாசில்தார் நிர்வகித்து வருகிறார். அவற்றில் இருந்து, வாடகை வருவாயாக வெறும், 93,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.மன்னர்கள், புரவலர்கள் 3,000 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினர். தற்போது, 1,000 ஏக்கர் நிலங்களே உள்ளன. அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.பக்தர்கள் வழங்கும் காணிக்கையை, தீட்சிதர்கள் எடுத்துச் செல்கின்றனர். கோவில் நிர்வாகத்துக்கு தேவைப்படும்போது, தீட்சிதர்கள் பங்களிப்புத் தொகையை வழங்குகின்றனர். காணிக்கை வரவு செலவு கணக்கை பராமரிக்க, தனித்திட்டம் வகுக்கவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் வாதாடினார்.அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் வாதாடியதாவது: அறநிலையத் துறை வசம் கோவில் வரும்போது, நடராஜர் கோவிலுக்குச் சொந்தமாக 1,000 ஏக்கர் மட்டுமே இருந்தது. 2,000 ஏக்கர் நிலங்களை, தீட்சிதர்கள் விற்று விட்டனர். அதுகுறித்த விபரங்களை வழங்கவில்லை. பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, கோவில் கணக்கில் தீட்சிதர்கள் செலுத்துவதில்லை. அதை எடுத்துச் செல்கின்றனர். தவறான நிர்வாகம் காரணமாக, கோவில் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் கோவில் வந்தது முதல் இன்று வரை, வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அறிக்கை

கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்கள் விற்கப்பட்டதும், 1,000 ஏக்கர் நிலங்களில் இருந்து லட்சத்துக்கும் குறைவாக வருவாய் கிடைப்பதும், பக்தர்கள் காணிக்கை கோவில் கணக்கில் செலுத்தப்படுவதில்லை என்பதையும் கேட்கும்போது, ஆச்சரியம், அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, 2017 - 18ம் ஆண்டு முதல் 2021 - 22ம் ஆண்டு வரை வரவு செலவு கணக்கு புத்தகங்களை, தீட்சிதர்கள் தாக்கல் செய்ய வேண்டும். காணிக்கை, செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவை தாக்கல் செய்ய வேண்டும்.கோவிலுக்குச் சொந்தமாக, தற்போது எவ்வளவு பரப்பு நிலம் உள்ளது என்பது குறித்து, தாசில்தாரர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.தீட்சிதர்கள் 2,000 ஏக்கர் நிலங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டு குறித்து, முழு விபரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக, அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அக்., 3க்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

Ashok Subramaniam
அக் 06, 2024 09:32

இப்படி இனவாத பிரிவினை உருட்டு உருட்டியே பிழைப்பை நடத்துபவர்கள் வெங்காய ராமசாமியரிஸ்டு திராவிஷங்கள்.. உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கெதிராக உயர் நீதி மன்றம் ஆட்டையப் போட வாயை அகண்டு திறந்திருக்கும் திராவிடங்களுக்கு அனுகூலமாக செயல்படுவது நீதித்துறையின் நீசத்தனமான போக்கையே காட்டுகிறது


sankaran
செப் 25, 2024 16:24

TN Govt lost the case against Dikshitars in supreme court long time back... Thanks to Su Samy...To take revenge, TN govt is trying all methods and techniqs to destroy Dikshitars and take the temple back in their control... If there is corruption, govt has got all the machineries to find out... before court direct them, they should have submitted the evidence..


Manohar Vellaichamy
செப் 21, 2024 23:21

இப்பத்தான் தெரியுது எதுக்கு ஒரு கும்பல் கோவில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்க வேண்டுமென்று போராடுகிறது அப்போ தான் இந்த மாதிரி 1000 , 2000 ஏக்கர் என்று ஆட்டைய போடலாம்


Pubglovers Gamer
செப் 21, 2024 10:22

பாவம் நீதி மன்றம் மடாதிபதிகள் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலம் விற்பனை செய்து விட்டார் கள் புகாரை வராது ஏப்பம் விட்டாரகள்


Bhaskaran
செப் 21, 2024 08:46

பக்தர்கள் நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் அனைத்து ஆலய நிர்வாகம் ஒப்படைப்பது ஒன்றே வழி


தாமரை மலர்கிறது
செப் 21, 2024 01:05

கோவிலுக்கு கொடுக்கப்படும் பணம் மற்றும் நிலம் கோவிலை கவனிக்கும் தீட்சிதர்களுக்கே சொந்தம். இதை அவர்கள் மருத்துவம் செலவு, கல்யாணம் மற்றும் படிப்பிற்காக உபயோகப்படுத்திக்கொள்வதில் என்ன தவறுள்ளது


kantharvan
செப் 22, 2024 11:48

அதெப்படி தீட்சிதர்களுக்கு சொந்தமாகும். ஒரு அளவுக்கு மேலே இப்படி சப்பை கட்டு கட்டினால் பெரும்பான்மை ஹிந்துக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். சிவன் சொத்து குல நாசம் மறவாதீர் .


Raj Kamal
செப் 20, 2024 12:05

ஒதுக்கி வையுங்களேன், யார் வேண்டுமென்பது?


தமிழ்வேள்
செப் 20, 2024 11:42

சிதம்பரம் கோவிலின் தங்க வில்வமாலை, சபாநாயகர் உலா திருமேனி ,இரத்தின லிங்கம் ஆகியவை திருட்டு திராவிட மதம் மாற்றி சிலை கடத்தல் கும்பலின் கண்ணை உறுத்துகிறது ......திருட்டு திராவிடம் அழிந்து சுடுகாடு ஆக போவது நிச்சயம்


kantharvan
செப் 22, 2024 11:50

தம்பி திருடன் யாருன்னு வெட்ட வெளிச்சமாகி விட்டது? இன்னுமா இப்படி கூவுறீங்க வெட்கமாக இல்லை??


Velan Iyengaar
செப் 20, 2024 11:42

மடியில் கணம் இல்லையென்றால் எதுக்கு பயப்படணும் ?? முதுகுல அவ்ளோ அழுக்கு வெச்சிகிட்டே இவ்ளோ திமிரா ???


subramanian
செப் 20, 2024 14:49

வாயை மூடிக் கொண்டு போ


xyzabc
செப் 20, 2024 11:23

சிதம்பரத்தின் எம் பி திருமா. சிறுத்தைகளை கேட்டால் தெரியும். சேகர் பாபு , தி மு க புள்ளிகள் நீண்ட நாட்களாக இந்த கோயில் மீது ஒரு திரிஷ்டி கண் வைத்து கொண்டே இருக்கிறார்கள். எப்பொழுது கொள்ளை அடிக்க அவகாசம் கிடைக்கும். இந்த திருடர்களிடம் இருந்து தப்புவது கஷ்டம்.


Velan Iyengaar
செப் 20, 2024 11:43

இங்க யாரு திருடன் ?? உயர்நீதிமன்றம் யாரை விசாரிக்கிறது ?? யார் கணக்கு வழக்குகளை ஒழுங்கா தராம பம்முகிறார்கள் ???


முக்கிய வீடியோ