உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்து எந்த அமைச்சருக்கு கூடுதல் இலாகாக்கள்?

அடுத்து எந்த அமைச்சருக்கு கூடுதல் இலாகாக்கள்?

''ஆளுங்கட்சியில அடுத்த எதிர்பார்ப்பு உருவாகிடுச்சுங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.''விளக்கமா சொல்லும் வே...'' என்றார், அண்ணாச்சி.''பொன்முடி மாதிரியே, இன்னும் சில அமைச்சர்களும் சொத்து குவிப்பு வழக்குல சிக்கியிருக்காங்களே... அவங்களுக்கும் தண்டனை கிடைச்சா, அமைச்சர் பதவி போயிடும்...''அப்ப, எந்த அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும்னு கட்சிக்குள்ள விவாதம் நடக்குதுங்க... இதுல, முதல்வருக்கு நெருக்கமான சென்னை அமைச்சர் ஒருவருக்கு கூடுதல் இலாகாக்கள் கிடைக்குமாம்...

''அதேபோல, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவருக்கும் அமைச்சரா பதவி உயர்வு வழங்கவும் வாய்ப்பு இருக்குன்னு, கட்சி நிர்வாகிகள் பேசிக்கிறாங்க...'' என, விளக்கி முடித்தார், அந்தோணிசாமி.''அண்ணன் எப்ப கிளம்புவான்... திண்ணை எப்ப காலியாகும்னு காத்துண்டு இருக்கா போல...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Subramaniam
ஜன 01, 2024 09:37

செயல்திறன் மிக்க பிடிஆர் ஐ பதவி குறைத்ததின் விளைவு ?


NicoleThomson
ஜன 01, 2024 11:46

உண்மை திமுகவின் தலைமை பொறுப்பு அவரிடம் இருந்து இருக்க வேண்டும் , இல்லையா முதல்வர் பதவியாவது கொடுத்திருக்க வேண்டும் , மக்கு மண்டைகளிடம் கொடுத்ததால் மதவெறி பிடித்தவர்கள் காலில் விழும் முதல்வர் என்ற பெயர்தான் மிஞ்சியிருக்கு


Ramesh Sargam
ஜன 01, 2024 08:25

கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்படுவதால் அவர்கள் பணிச்சுமை ஒன்றும் அதிகரிக்காது. அந்த பணியையும் இலாகாவில் உள்ள பெரிய அதிகாரிகள்தான் செய்யவேண்டி இருக்கும். ஆனால் கூடுதல் இலாகாக்கள் என்றால், அந்த அந்த அமைச்சர்களுக்கு கூடுதல் 'வருமானம்' கிடைக்கும்.


NicoleThomson
ஜன 01, 2024 11:48

கரெக்ட்டா சொன்னீங்க ரமேஷ் சார்


Ramesh Sargam
ஜன 02, 2024 01:13

நன்றி நிக்கோல் பிரதர்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை