உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பு ஏன்: காரணம் கேட்கிறார் ராமதாஸ்

முதல்வர் ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பு ஏன்: காரணம் கேட்கிறார் ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'' கடந்த ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் - தொழிலதிபர் அதானி ரகசிய சந்திப்பிற்கான நோக்கம் என்ன?'' என பா.ம.க., தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழக மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆவணத்தின் 20 மற்றும் 21-ஆம் பத்திகளில் தமிழக மின்சார வாரியமும், அதன் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில்,'' ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு - காஷ்மீர், தமிழகம், சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த திட்டத்தின்படி சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.தமிழக மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கையூட்டு வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழக மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழக மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.தமிழக மின்சார வாரியம் ரூ.1.8 லட்சம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. ஆட்சியாளர்களின் லாபம் மற்றும் சுயநலத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளுவதையும், அப்பாவி மக்கள் மீது மின்கட்டண சுமையை சுமத்துவதையும் அனுமதிக்க முடியாது.கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினை, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன? அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

K.n. Dhasarathan
நவ 22, 2024 10:25

மருத்துவர் ஐயா உங்கள் கூட்டணி தலைவர் மோடி ஜி எதார்க்கு அடானியை சந்திக்கிறாரோ அதற்குத்தான், அதான் ரகசியம் என்று சொல்லிடீங்களே பிறகு விளக்கம் கேட்டால் எப்படி ?


raja
நவ 22, 2024 09:44

வேறு எதுக்கு சந்தித்து இருப்பார்கள் ..


Shunmugham Selavali
நவ 21, 2024 22:41

டாக்டர் ஐயா கேள்விக்கு திராவிட மாடல் அரசு விளக்கம் கொடுக்க வேண்டும்.


sankaranarayanan
நவ 21, 2024 21:10

கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி தமிழகத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருப்பதால் இனி அவரைப்பற்றி தாறுமாறாக பேசவே மாட்டோம் முடிந்தால் அதில் மருமகனையும் சேர்த்துக்கொள்ள சொல்லுவோம் இதுதான் பேச்சின் தனி சிறப்பு யாரும் இதை கேட்கவே முடியாது


Barakat Ali
நவ 21, 2024 20:50

மின் உற்பத்திக்கு தரமற்ற நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டதற்கு எந்த விசாரணையும் நடக்கல .... தமிழக எதிர்க்கட்சிகளும் - பாஜக உட்பட - அது பத்தி பிற்பாடு எதுவும் பேசல ...... அனைத்து கட்சிகளும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு .....


கல்யாணராமன்
நவ 21, 2024 20:22

மேலும் விலாவாரியாக விளக்கங்கள் அண்ணாமலை நாடு திரும்பிய பின் விளக்குவார்.


Karthi
நவ 21, 2024 19:32

Ada ramdaas


அப்பாவி
நவ 21, 2024 19:23

போன தடவை தரமற்ற நிலக்கரி இறக்குமதி பண்ணி ஒண்ணாந்தர நிலக்கரின்னு தமிழகத்துக்கு வித்ததுக்கு கமிஷன் பணம் செட்டிலாகலையோ என்னமோ. விடியல் இதிலெல்லாம் ரொம்ப ஸ்டிரிக்ட்.


S Sivakumar
நவ 21, 2024 18:56

இதைத்தான் இறந்தவர் வீட்டில் கொள்ளையடித்து பணம் சம்பாதிப்பது போன்ற செயல்.‌ ஏன் மத்திய அரசு மற்றும் ராகுல் மௌனம்?


Karthi
நவ 21, 2024 19:33

ராகுல் ஒன்லி குறை சொல்ல லக்கி.


Barakat Ali
நவ 21, 2024 17:36

நெல்லுக்கு இறைத்த நீர் அங்கே புல்லுக்கும் பொசிந்ததாம் என்பது போல மின்வாரிய அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அது அமீச்சர் வழியாக மன்னர் புலிகேசி வரை போயிருக்கும் .... அதை வலது கையால் வாங்கி அதே பணம் சிறிதளவு இடது கையால் இருநூறு ஊவா கொத்தடிமைகளுக்கும் விநியோகம் ஆகியிருக்கலாம் .... ஆக , ஆக , கழகத்தின் கூலிப்படை சாக்கடையில் வழித்து உண்டு அனுபவிப்பது அதானியின் பணமாகவும் இருக்கலாம் .....


Barakat Ali
நவ 21, 2024 17:56

பொறுப்பு அமீச்சர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை