மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
12 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
15 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
23 minutes ago
சென்னை:பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட அறிக்கை:கடந்த, 2023 டிச., 1க்கு முன்பு, அடுக்குமாடி திட்டங்களில் விற்பனையின் போது, கட்டடங்களின் உரிமை, வீடு வாங்குவோர் பெயருக்கு மாற்றப்படாமல் இருந்தது. கட்டுமான ஒப்பந்தம் மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டது.கட்டுமான ஒப்பந்த அடிப்படையில் வீட்டின் உரிமையை நிலைநாட்டுவது, மறுவிற்பனை செய்வதில் சட்ட சிக்கல்கள் எழுந்தன.இந்நிலையில், நிலத்துடன் கட்டடத்தின் உரிமையும், வீடு வாங்குவோர் பெயருக்கு முழுமையாக சென்றடையும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டுமே இது போன்ற நடைமுறை அமலில் இருந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ளது போன்ற கூட்டு மதிப்பு அடிப்படையில் பத்திரப்பதிவு செய்வது அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பான கோரிக்கை கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து தான் முதலில் வந்தது.இதன் அடிப்படையில், பல்வேறு கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தி, கூட்டு மதிப்பு அடிப்படையில் வீடு விற்பனையை பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. வீட்டின் விலை அடிப்படையில் சலுகைகளுடன் இதற்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இதன்படி, அடுக்குமாடி வீடு விற்பனை தொடர்பாக, 2023 டிச., 1 முதல், பிப்., 13 வரையிலான காலத்தில், 1,988 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தின் குடியிருப்பு திட்டத்தில், வீடு வாங்க பணம் செலுத்திய, 47 பேருக்கு, கட்டுமான ஒப்பந்தம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் உரிமை தொடர்பான பத்திரம், கட்டுமான நிறுவனத்தால் பதிவு செய்து தரப்படாததால், இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க, அவர்களின் நலனை பாதுகாக்கவே, இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
12 minutes ago
15 minutes ago
23 minutes ago