உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு பற்றி ஏன் குறிப்பிடவில்லை?: ப.சிதம்பரம் கேள்வி

பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு பற்றி ஏன் குறிப்பிடவில்லை?: ப.சிதம்பரம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: ''ச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள்; ஆனால், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?'' என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக சிவகங்கையில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள்; ஆனால், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? 10 ஆண்டுகளாக அரைத்த மாவையே தான் தேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர். சாத்தியமே இல்லாத திட்டங்கள் எல்லாம் கூறி பா.ஜ., மக்களை ஏமாற்றி திசை திருப்ப முயற்சிக்கிறது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.பா.ஜ., அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது இந்திய மக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தி பெரும் மோதல்களுக்கு வழிவகுக்கும். பா.ஜ., ஆட்சியில் இந்திய ஜனநாயகத்திற்கும், சகிப்புத்தன்மைக்கும் பேராபத்து எழுந்துள்ளது. அவர்களின் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் போன்றவை மக்களை பிளவுப்படுத்துவதுடன் நாட்டை சர்வாதிகார பாதையில் செலுத்தும்.நாட்டை உடைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பா.ஜ., கூறுகிறது. ஆனால், பா.ஜ., தான் நாட்டை உடைக்கிறது; ஜம்மு காஷ்மீரை மூன்றாக உடைத்தது யார்? இந்தியாவை சர்வாதிகார பாதையில் கொண்டு செல்ல பா.ஜ., திட்டமிட்டு செயல்படுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

NicoleThomson
ஏப் 19, 2024 08:47

அன்று விட்டு கொடுத்தது காங்கிரஸ் என்ற வகையில் முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு இந்த டயலாக் விட்டிருந்தா இவரை பாராட்டலாம்


Sridhar
ஏப் 18, 2024 14:34

அந்த தீவை விட்டுக்கொடுத்ததோடு மட்டும் இல்லாமல், அதுக்கு கூட்டுகளவாணி கட்டுமரம்ங்கற உண்மையையும் இவ்வளவு நாள் மறைச்சிட்டு, இப்போ கொஞ்சம்கூட வெக்கமோ மானமோ சூடொ சொரணையோ இல்லாம இன்னொரு கட்சியை பாத்து அத மீட்டுக்கொடுங்கன்னு கேட்கறதுக்கு ஒரு தனி தில்லு வேணும் அது இந்த ஆளுகிட்ட இருக்கு


Dharmavaan
ஏப் 18, 2024 06:08

என்ன அயோகியதனம் தாரைவார்ப்பது இவன் கட்சி மீட்க வேண்டியது மோடியா அப்போது ஏன் இவர்கள் தடுக்கவில்லை இவன் தகுதி மீறி கடன் கொடுப்பான் மல்லய்யா சோக்சிநீரவ் போல ஆனால் வசூல் செய்ய வேண்டியது மோடியா


ALWAR
ஏப் 17, 2024 22:36

பிஜேபி , துரோக காங்கிரெஸ் தமிழிந தலைவர் எல்லோரையும் தூக்கில் போடுவோம் என அறிவிக வேண்டுமா ?


M.S.Jayagopal
ஏப் 17, 2024 19:09

கட்சத்தீவு மீட்கப்பட்டுவிட்டாலும், தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் முழுமையாக தீராது என கேள்விப்பட்டு இருக்கிறேன்


M.S.Jayagopal
ஏப் 17, 2024 19:09

கட்சத்தீவு மீட்கப்பட்டுவிட்டாலும், தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் முழுமையாக தீராது என கேள்விப்பட்டு இருக்கிறேன்


enkeyem
ஏப் 17, 2024 15:46

கச்சத்தீவை மீட்பது என்பது இரு நாட்டுக்கும் இடையில் நடைபெறவேண்டிய ராஜாங்க நடவடிக்கை இதையெல்லாம் கட்சி சார்பில் வாக்குறுதி கொடுத்துதான் செய்யவேண்டும் என்பது இல்லை அப்படி செய்வது தவறான நடவடிக்கை அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மோடி அரசு ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது


RAJ
ஏப் 17, 2024 15:26

சரி சார் அவங்களால முடியல உங்க தேர்தல் அறிக்கைள போடுங்க


RAJ
ஏப் 22, 2024 23:13

முடியமா? நடக்குமா?


KavikumarRam
ஏப் 17, 2024 15:07

அப்பூச்சிக்கு வயசாயிட்டு என்னென்னமோ உளர்றாரு


KavikumarRam
ஏப் 17, 2024 14:31

கச்சத்தீவு என்பது இப்போது ஒரு சர்வதேச விஷயம் அதை இவர் சொல்வது மாதிரி கூமுட்டைத்தனமாக தேர்தல் அறிக்கையில் எல்லாம் வெளியிட முடியாது அதை இரு நாடுகளும் சேர்ந்து கமுக்கமாக சுமுகமாக சாதிக்கவேண்டிய விஷயம் இதை மோடியால் மட்டுமே செய்ய முடியும் பாரத நாட்டின் துரோகி இதைப்பற்றி எல்லாம் பேசுவதற்கு தகுதியே இல்லாதவர் இவர்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை