உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசின் திட்டம் போல் ‛பில்டப் தருவது ஏன்

மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசின் திட்டம் போல் ‛பில்டப் தருவது ஏன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில், 'இஸ்ரோ'வின் ஏவுதளம் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பது, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும்.மத்திய அரசு அமைக்க உள்ள, 'இஸ்ரோ'வின் ஏவுதளத்தை, மாநில அரசு அமைப்பது போல, 'பில்டப்' தருவது ஏன்?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: உலக பேரழிவை உருவாக்கிய கொரோனா தொற்று; அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சமாளித்து, வெளிநாடுகள் மத்தியில், பாரத தேசத்தின் மதிப்பை துாக்கி நிறுத்தி, பயங்கரவாதத்தின் முதுகெலும்பை நொறுக்கி, ஊழலற்ற நிர்வாகம் என நிறைவுகளையும், நிம்மதியையும் நாட்டுக்கு தந்திருக்கும் பிரதமர் மோடிக்கு, 2024ல் மூனறாவது முறை வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு இந்தியனும் உளமாற நன்றி செலுத்த வேண்டும்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியில் இவருக்கும், 'சீட்' உறுதியாகிடுச்சோ?அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: திரைப்பட துறையில் உள்ள பெண்கள் மீது, தொடர்ச்சியாக பல்வேறு விதமான தாக்குதல்கள் வருவதற்கு காரணம், கவர்ச்சி என்ற பெயரில் காட்டும் உச்சகட்டமான ஆபாசமே ஆகும். பெண்களின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உடல் அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் நிலை மாற வேண்டும். பெண்கள் மாறினோலே, மாற்றம் நிகழும்.வாஸ்தவம் தான்... ஆனா, இதை திரையுலகம் ஏற்றுக்கொள்ளுமா என தெரியலையே!அகில இந்திய காங்., செயலர்விஸ்வநாதன் அறிக்கை: ஜனநாயகத்தை போற்றக் கூடியவரும், தியாகத்தின் மறு உருவமுமான சோனியா, ராஜ்யசபாவிற்கு, ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காகவும், அனைத்து தரப்பு மக்களின் உயர்வுக்காகவும் லோக்சபாவில் ஐந்து முறை எம்.பி., பதவி வகித்து குரல் கொடுத்தவர். தன்னை தேடி வந்த பிரதமர் பதவியை தியாகம் செய்த சோனியா, முதன் முறையாக, ராஜ்யசபாவுக்கு வருகிறார். அங்கு, அவரது குரல் ஜனநாயகத்தை தழைக்கச் செய்யும்.டில்லியில அரசு பங்களாவான, 10, ஜன்பத் இல்லத்தை தியாகம்செய்ய மனமில்லாம தான், அவங்க ராஜ்யசபாவுக்குள்ள போறதா சொல்றாங்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

sankar
பிப் 23, 2024 13:00

எல்லாம் நாங்கள்தான் - மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கி அதை இதுவரை எல்லோரையும் நம்ப வைத்து இருக்கிறார்கள் - அந்த மாயத்திரை இப்போது விலகும் காலம் வந்துவிட்டது - இவளைகள் போலி அரசியல்வாதிகள் என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்


venugopal s
பிப் 23, 2024 11:36

ஏனென்றால் குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணை தளம் மட்டுமே மத்திய அரசு அமைக்கப் போகிறது. அங்கு விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா தமிழக அரசு அமைக்கப் போகிறது!


sankar
பிப் 23, 2024 15:14

இருநூறு ரூபாய்க்கு வேலை செய்து விட்டார்


rameshkumar natarajan
பிப் 23, 2024 09:30

Whether central government has any seperate citizens? or they generate revenue from other world? All these money are from the states. Central government doesn't have any citizens seperately.


sankar
பிப் 23, 2024 11:03

அதனால் என்ன - இது போன்ற வேலைகளை மத்திய அரசு மட்டுமே செய்ய முடியும் - மாநிலங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை - ஏனெனில் தரம் தராதரம் முக்கியம் - கட்டிங் வேலை இருக்கக்கூடாது - பிரிவினை சக்திகளாக பல மாநில அரசுகள் மாறலாம்


Suppan
பிப் 23, 2024 13:22

குலசேகரப்பட்டினத்தில் இந்த ஏவுகணை தளம் பலவருடங்களுக்கு முன்பே வந்திருக்கவேண்டியது. நில ஆர்ஜிதம் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தை நடத்த மாநில அரசை அழைத்திருந்தது. சம்பந்தப்பட்ட அமைச்சரோ வந்தது பல மணி நேர தாமதம். அதுவும் நிலை தடுமாறி, முதல் கேள்வி " எங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?" தலைவர் தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஏவுகணைத்தளம் ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் சென்றது. இதுதான் திராவிட மாடல்


Ramesh Sargam
பிப் 23, 2024 09:29

சார், இதுவரை திமுகவினர் ஒரே ஒரு இடத்திற்கு அந்த கருணாநிதி பெயர் வைக்கவில்லை. அது எது தெரியுமா? ஏன் அவர் பெயர் வைக்கவில்லை என்றும் தெரியுமா? ஆம் தமிழகத்தில் ஒரு ரயில் நிலையத்துக்கும் அந்த கருணாநிதி பெயர் வைக்க அவர்கள் விருப்பம் காட்டவில்லை. விரும்பம் இருந்திருந்தால், புரட்சி தலைவர் MGR சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே கலைஞர் கருணாநிதி ரயில் நிலையம் என்று பெயர் மாற்றி இருப்பார்கள். அவர்களுக்குள்ளே ஒரு மனக்குடைச்சல், அப்படி பெயர் வைத்தால் என்ன ஆகும் என்று.


sankar
பிப் 23, 2024 13:02

ஆனால் பஸ்ஸ்டாண்டு போகும் வரும் - தனக்கு வேண்டும் என்கிற இடத்துக்கு மாற்றமுடியும் - ரியல் எஸ்டேட் மேதாவிகள் இவர்கள் - ஆனால் - ரயில் நிலையம் மாறாது சார்


ஹரி
பிப் 23, 2024 08:00

திருகுவளை தந்த கலைஞர் கருணாநிதி ராக்கெட் ஏவுதளம். வச்சிப் பாரு ராக்கெட் மேல போகுதான்னு


அப்புசாமி
பிப் 23, 2024 07:40

இஷ்டம் இருந்தா செய்யுங்க. இல்லேன்னா போய்க்கிட்டே இருங்க. மத்திய அரசு, மாநில அரசு திட்டம்னு சொல்லாம மக்கள் திட்டம்னு செய்யுங்க.


Ramesh Sargam
பிப் 23, 2024 06:11

திமுகவினரே, திமுக முதல்வரே உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், மரியாதை எதுவும் இல்லையா. இப்படியா மத்திய அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைத்து மக்களை ஏமாற்றுவது?


rameshkumar natarajan
பிப் 23, 2024 13:51

Are they not ashamed to take money from states and spend as if it's central government schemes?


நரேந்திர பாரதி
பிப் 23, 2024 03:48

"மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசின் திட்டம் போல் ‛பில்டப்' தருவது ஏன்"...இந்த திருட்டு திராவிடிய கும்பலுக்கு அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுறது, ஸ்டிக்கர் ஓட்டுறது தவிர வேறென்ன தெரியும்? அடுத்தவன் பெண்டாட்டி தான் பெண்டாட்டி, அடுத்தவனுக்கு பொறந்த பெண்ணையே தான் பெண்ணுன்னு சொன்ன கூட்டமாச்சே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை