உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்மொழி கொள்கை குறித்து முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி

மும்மொழி கொள்கை குறித்து முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மும்மொழி கொள்கை குறித்து இதுவரை பதில் அளிக்காமல் முதல்வர் ஸ்டாலின் மறுத்து வருவது ஏன்? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வர் ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கட்சியினருக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன். அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z9gy1091&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க முதல்வர் ஸ்டாலின் மறுத்து வருகிறார். மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் தி.மு.க.,வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ., அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா ஸ்டாலின்? உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, ஹிந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Ramesh Sargam
பிப் 25, 2025 21:04

பதில் தெரிந்தால்தானே கூறுவார். அல்லது எப்பொழுதும் துண்டு சீட்டில் எழுதிக்கொடுக்கும் ஆசாமி பதிலை எழுதிக்கொடுக்கவில்லை போல தோன்றுகிறது.


மதிவதனன்
பிப் 25, 2025 22:58

இவரை அவர்கள் மதிப்பதே இல்லை


T.sthivinayagam
பிப் 25, 2025 19:57

மும்மொழி கொள்கையில் ஹிந்தி இல்லாமல் வேறு இந்திய மொழிகளில் எதை வேண்டுமானாலும் படிக்கலாமாம்.குஜராத்தி அல்லது அஸாமியோ அல்லது பஞ்சாப்பியோ எட்டாம் வகுப்பு வரை படிப்பதும் மாணவர்களுக்கு தேவையில்லாத சிரமம் தானே...?


தேவதாஸ், புனே.
பிப் 25, 2025 18:03

அண்ணாமலை மட்டும் தனி ஆளாக போராடுகிறார்..... ஒத்த கருத்துடைய மாநில கட்சிகளும் சேரவேண்டும்.... ஆனால் தேவையில்லாமல் பயப்படுகிறார்கள்...... இவர்களின் இந்த பயம் நாளைய இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விகுறி ஆக்குகிறார்கள் என்பதை அறியவில்லை ..... அண்ணாமலையுடன் மற்ற பாஜக நண்பர்களும் இன்னும் அதிகமாக குரல் கொடுக்கவேண்டும்......


தேவதாஸ் புனே
பிப் 25, 2025 18:02

அண்ணாமலை மட்டும் தனி ஆளாக போராடுகிறார்..... ஒத்த கருத்துடைய மாநில கட்சிகளும் சேரவேண்டும்.... ஆனால் தேவையில்லாமல் பயப்படுகிறார்கள்...... இவர்களின் இந்த பயம் நாளைய இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விகுறி ஆக்குகிறார்கள் என்பதை அறியவில்லை ..... அண்ணாமலையுடன் மற்ற பாஜக நண்பர்களும் இன்னும் அதிகமாக குரல் கொடுக்கவேண்டும்......


T.sthivinayagam
பிப் 25, 2025 17:59

மேல் படிப்புக்கு உதவாத ஹிந்தியை எட்டாம் வகுப்புக்கு வரை ஏன் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது புரியாத சூஷ்மமாக இருக்கிறது


Nagraj Muthiah
பிப் 25, 2025 19:10

மும்மொழி கொள்கை ஹிந்தி கட்டாயம் இல்லை இந்திய மொழிகளில் எதாவது ஒன்னு


krishna
பிப் 25, 2025 20:38

200 ROOVAA COOLIE


venugopal s
பிப் 25, 2025 17:10

மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தான் ஏற்கனவே சொல்லி விட்டாரே , உங்களை வேறு தனியாகக் கூப்பிட்டு சொல்ல வேண்டுமா?


Kjp
பிப் 25, 2025 18:21

சம்பத் அவர்களே மத்திய மந்திரி தான் மும்மொழி கொள்கையை ஏற்று கொள்ளா விட்டால் நிதி கிடையாது என்று சொல்லி விட்டாரே.என்ன ஒரு வருத்தம் முதல்வர் குடும்பம் திராவிட கட்சிகள் தனியார் பள்ளிகள் நடத்தும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தி கற்று தரப் படுகிறது.கல்வி அமைச்சர் மகன் தமிழே படிக்காமல் பிரெஞ்சு படிக்கிறார்.பாவம் ஏழை மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமல் மூன்றாவது மொழி படிக்க வாய்ப்பு இல்லை.


krishna
பிப் 25, 2025 20:39

UNAKKU VERU MOZHI AVASIYAM ILLAI.


Madras Madra
பிப் 25, 2025 16:54

ஹிந்தியை திணித்தது காங்கிரஸ் பதவிக்காக அப்போது தமிழ் பற்று வேஷம் களைந்து கூட்டணி வைத்து கொள்ளை அடித்து விட்டு இப்போ முதலை கண்ணீர் தமிழ் தமிழ் என்று ஒன்னரை லக்ஷம் தமிழர்கள் கொல்லப்பட்டது காங்கிரஸ் கூட்டணியில் வைத்து கொண்டு இப்போ தமிழ் தமிழ் என்று பாசாங்கு இன்னும் இவர்களை நம்புபவன் ஆறு அறிவு படைத்தவனா என்பது சந்தேகமே


Velan Iyengaar
பிப் 25, 2025 16:20

பாராளுமன்ற தொகுதி சீரமைப்பு குறித்து நீ ஏன் வாயே திறக்கமறுக்கிறாய் ???


Suppan
பிப் 25, 2025 16:38

வேலன் சாமி 1950 71 ல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு பாராளுமன்றத்தொகுதிகள் இருந்தனவோ அதே எண்ணிக்கையை ஐம்பது ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டன. ஏனென்றால் தமிழகம் போன்ற மறு சீரமைப்பு நடக்கும். அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படலாம். ஆகவேதான் புதிய பாராளுமன்றக்கட்டிடம் பெரிதாகக்கட்டப்பட்டிருக்கின்றது. .


Kjp
பிப் 25, 2025 16:44

அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏன் நழுவுகிறீர்கள்.பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு கதை விடாதீர்கள் வேலவவரே.


krishna
பிப் 25, 2025 17:11

EERA VENGAAYAM 200 ROOVAA KEVALA OOPIS BOLI VELAN IYENGAR. MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM UNAKKU PARLIAMENT THOGUDHI SEERAMAIPPU PATHI EPPADI THERIUM.MAKKAL THOGAI PORUTHU SEERAMAIPPU NADAKKUM ADHUFHAAN DEMOCRACY.OOH GOPALAPURAM KOTHADIMAI UNAKKU DEMOCRACY ENDRAALE ENNA ENA THERIYAADHU.


pmsamy
பிப் 25, 2025 16:16

அது தேவையில்லாத விஷயம்


Rajarajan
பிப் 25, 2025 16:13

நீங்கள் கையில் வெண்ணைய் வைத்துக்கொண்டு, நெய்க்கு அலைகிறீர்கள். அடுத்த ஐந்து வருடமும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், கீழ்கண்ட வழியை வரும் கல்வியாண்டிலேயே துவங்கலாம். எப்படி ?? தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய நகர்ப்புறங்களில், நீங்களே உங்களது மத்திய அரசின் செலவில், ஹிந்தி கற்பிக்கும் நிலையங்களை இலவசமாக ஆரம்பியுங்கள். இதற்கான பாடத்திட்டம், நோட்டு புத்தக செலவு, ஆசிரியர், கற்பிக்கும் இடம் போன்றவற்றுக்கான செலவை நேரிடையாக மத்திய அரசே ஏற்றுக்கொள்ளட்டும். சம்பந்தப்பட்டவர் கணக்கில் மாதா மாதம் மத்திய அரசே வரவு வையுங்கள். இதை கண்காணிக்க ஒரு குழுவை வையுங்கள். அவற்றை ஒருங்கிணையுங்கள். இதில் தமிழக அரசு பள்ளி மாணவர் இலவசமாக சேரலாம் என்று அறிவியுங்கள். மேலும், இதற்கான போக்குவரத்து செலவு, அரசு பேருந்தில் மாணவருக்கு இலவசம் தானே. இதை வார விடுமுறை கல்வியாக, சுமார் இரண்டு மணிநேரம் வைத்தாலே போதுமே ?? இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்து, உரையாடல் / எழுதும் திறன் / படிக்கும் திறன் போன்றவற்றை, அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொண்டால் போதுமே இதற்கு தேர்வு என்று அந்த ஹிந்தி ஆசிரியரே நடத்தி, அவ்வப்போது அறிவை சோதித்து சரி செய்யலாமே. இதற்கு எதற்கு தமிழ் நாட்டிற்கு நீங்கள் நிதி தந்து, அது காணாமல் போய், போராட்டம் நடத்தி, விசாரணை கமிஷன் வைத்து, போன்ற வீண் வேலைகள் எல்லாம். கொக்கின்மேல் வெண்ணை வைத்து, அது உருகி, கொக்கின் கண்ணை மறைத்து, பின்னர் பிடிப்பது வீணான வேலை. நீங்களே நேராக களத்தில் இறங்குங்கள். காரியம் பெரிதா, வீரியம் பெரிதா ?? இப்படி படித்தால், அரசு பள்ளி மாணவருக்கு, ஹிந்தி மொழி படிக்க வராதா என்ன ?? எண்ணம் இருந்தால், செயலில் வரும். தமிழக மாவட்டத்தை, சிறு நகரங்களாக பிரித்து, இறங்கி செயல்படுத்தித்தான் பாருங்களேன். இதில் தமிழக அரசு தலையிடவே முடியாதே. ஒரு கதவை அடைத்தால், மறு கதவு திறக்கும். ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான் இறைவன். மனம் இருந்தால், மார்க்கம் உண்டு. வெற்றி உங்களுக்கே.


ஆரூர் ரங்
பிப் 25, 2025 16:46

சிபிஎஸ்சி பள்ளிகள் துவக்க தடையில்லாத் சான்றிதழ் தேவையில்லை எனும் மத்திய அரசின் சமீப உத்தரவு அவர்களே இங்கு நிறைய நவோதயா பள்ளிகளைத் திறக்க வசதியாகத்தான் .சிலவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் செய்வது சிறந்தது .அப்போ திரவிஷா கும்பலால் ஒன்றும் செய்ய முடியாதே


Kjp
பிப் 25, 2025 16:51

ஐயா உங்கள் பதில் இவ்வளவு நீளம் இருக்கிறது.மற்ற மாநிலங்கள் மாணவர்கள் நலனுக்காக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.தனியார் வருமானம் போய் விடும் என்பதால் மறுக்கப்படுகிறது என்பதே உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை