உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., புறக்கணிப்பு ஏன்?

காங்., புறக்கணிப்பு ஏன்?

தமிழக காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான செல்வப்பெருந்தகை கூறியதாவது:

அண்ணா பல்கலையில் நடக்கக்கூடாத அவமானகரமான சம்பவம் நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்; அண்ணா பல்கலை உட்பட பல பல்கலைகளில் துணை வேந்தர்கள் இல்லை. துணை வேந்தர் பதவி என்பது நிர்வாகத்தின் முதன்மையான பொறுப்பு. துணை வேந்தர் இல்லை என்பதால், அங்கே இப்படிபட்ட தவறுகள் நடப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. துணை வேந்தரை நியமிக்க கவர்னர் மறுக்கிறார். பல விஷயங்களில் தமிழக கலை, கலாசாரத்திற்கு எதிராகவும், பா.ஜ., ஊதுகுழலாகவும் இருக்கிறார். அதை கண்டித்து சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை