உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்?

சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், அவர் அமைச்சராக நீடிப்பது குறித்தும் கேள்வி எழுப்பியது.சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமின் மனுவை, கடந்த 12ம் தேதி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, ''இவ்வழக்கில், புலன் விசாரணை முடிந்து விட்டது. அமலாக்கத்துறை வசம் ஆவணங்கள் உள்ளன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், தலைமறைவாக உள்ளார் எனக்கூறி ஜாமின் மறுக்க முடியாது,'' என்றார்.இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறையில் உள்ளார். அமைச்சராக அவர் தொடர்வது குறித்து, ஏற்கனவே, 'டிவிஷன் பெஞ்ச்' கருத்து தெரிவித்திருந்தது. அரசு ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால், அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, அமைச்சராக தொடர அனுமதிப்பதன் வாயிலாக, மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? குற்ற வழக்கில் ஒரு நீதிபதிக்கு தொடர்பு இருந்தால், அவரை நீதிபதியாக தொடர அனுமதிக்க முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு, மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ''அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக, பதவி நீக்க தீர்மானத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர் பதவியில் தொடர்வது குறித்து, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதற்கு, விருப்பம் உள்ளவர்கள் அவர் முன் ஆஜராகலாம் என, தலைமை நீதிபதி தெரிவித்தார். அவர் நீதிபதியாகவும் தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமைச்சரை நீக்குவது தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவிட முடியாது,'' என்றார்.அதைத்தொடர்ந்து, ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க, அமலாக்கத்துறைக்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, பிப்ரவரி 14க்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

Barakat Ali
பிப் 01, 2024 12:49

வாக்களித்த இயந்திரங்களே (வாக்காளர்களே) கவலைப்படவில்லை. ..... காரணம் பெரும்பாலானோர் வரிக்கட்டும் அளவுக்கு சம்பாதிப்பவர்கள் அல்லர் .... ஆகவே வரிகட்டுபவனுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை வேண்டும் ......


இராம தாசன்
பிப் 01, 2024 03:17

அப்புறம் அவர் ஜாமினில் வெளிய வந்து விடுவாரே - அதனால் தான்


vaiko
ஜன 31, 2024 23:42

உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொன்ன வழக்கை, ஆனந்த் வெங்கடேஷ் எப்படி விசாரிக்கலாம்? ஆனந்த் வெங்கடேஷ் என்ன பெரிய அப்படக்கரா?


Anand
ஜன 31, 2024 17:50

கேடுகெட்ட ஆட்சி புழல் சிறையில் இருந்து தான் நடக்கும்....


Muralidharan S
ஜன 31, 2024 15:17

போலீஸ் ஏதாவது விசாரணை என்று வந்தாலே.. கூனி, குறுகி, ஆவணமாக கருதிய காலம் எல்லாம் இருந்தது.. இன்று 'குற்றம் செய்து', கைது ஆகி சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வந்தால் 'தியாகி', 'தியாகச்செம்மல்' , 'தியாகத்தலைவன்', 'தியாகத்தலைவி'....ராஜ மரியாதை.. அவர்கள் பின்னல் பெரும் கூட்டம்.. வெக்கமாவது, மானமாவது, சுரணை ஆவது......அது எல்லாம் இல்லாமல் இருந்தால்தால்தான் சொந்தமாக நாலு தீவுகள் வாங்க முடியும்... இங்கே, "யாருக்கும் வெட்கமில்லை" (இப்படிப்பட்ட அயோக்கியர்களை ஒட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் மக்களையும் சேர்த்து ...).. அவரவர் கர்மா.. நிறைய செல்வம் அதற்க்கு ஈடாக மிகுந்த வியாதிகளும் வரும் என்பதை கண்கூடாக பார்த்த பிறகும், அதை எல்லாம் மறந்து பாவச்செயல்களை எல்லோரும் செய்கின்றனர்.. முடிவு ஆண்டவன் கையில்...


Muralidharan S
ஜன 31, 2024 15:03

ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு, தேர்தல் பிரச்சாரத்தில், செந்தில் பாலாஜி'ஐ பற்றி, அவர் செய்த அக்கிரமங்களை பற்றி பட்டியலிட்டு பேசிய வீடியோ'வை நீதிபதி அவர்களும் பார்த்து இருப்பார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்ட செந்தில் பாலாஜி'ஐ மன்னித்ததோடு அல்லாமல், அமைச்சராகவும் வைத்து அழகு பார்த்தது ஏன், அவர் சிறைக்கு சென்று இருநூற்றி முப்பது நாட்களுக்கு மேல் ஆகியும், அவரை பதவியில் இருந்து தூக்கி ஏறிய முடியாதுதான் நிர்பந்தம் என்ன.. இதற்கான பதிலை எல்லாம், அடுத்த விசாரணை தேதிக்குள் நீதிமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால் ஒழிய இதற்க்கு பதில் எதுவும் வராது... ஒரு வேளை நாட்டிலேயே "மிகச்சிறந்த, நிர்வாகத்திறமை மிக்க" மனிதர் செந்தில் பாலாஜி ஒருவர்தானோ..அவரை அம்போ'ன்னு விட்டு விட்டால், எதிர்காலம் என்ன ஆவது...


ஆரூர் ரங்
ஜன 31, 2024 14:00

நம்ம ஊர்காரர் ராமசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தும் அவர் நீதிபதி பதவியை விட்டு விலகவில்லை????. நீக்கும் தீர்மானத்தை பார்லிமெண்டில் நிறைவேறவிடாமலடித்தது காங்கிரசின் சாதனை . தமிழர் என்று பெயருண்டு. தனியே ஒரு குணமுண்டு. அதாவது ஊழலை மன்னித்து பதவியும் அளிப்பது .


Ram
ஜன 31, 2024 13:54

... பயலுக தி மு க கரனுக சார்


Velan Iyengaar
ஜன 31, 2024 13:33

எப்பேர்ப்பட்ட பாகுபாடு காட்டும் உருப்படி இது என்பது இது இதுவரை வழங்கி உள்ள தீர்ப்புகளை ஆய்வு செய்தால் தெளிவாகிவிடும்....


Velan Iyengaar
ஜன 31, 2024 13:28

நீதிபதிகளின் roster முறையில் பாகுபாடு காட்டப்படுவதாக சக நீதிபதிகள் உள்ளுக்குள்ளே புழுங்குவது கண்டு தலைமை நீதிபதி ஒரு தெளிவான முடிவு எடுக்கவேண்டும்....இந்த ஆனந்து வெங்கடேசுக்கு மறுபடி மறுபடி ஒரே portfolio ஒதுக்கப்பட்டுள்ளது கடும் கேள்விக்குள்ளாகி இருக்கு இதெயெல்லாம் ஸ்ரீராமர் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு அடிப்பார் என்று சக்தி மிக்க ஸ்ரீராமரை நம்புவோம்


Narayanan
ஜன 31, 2024 15:06

நீதித்துறையில் ஆனந்து வெங்கடேஷ் மாதிரி ஒருவராவது வேண்டும் . உங்களின் திமுக விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லையா ? இந்த லக்ஷணத்தில் ஐயங்கார் என்று வேறு போட்டுக்கொள்வது .


தமிழ்வேள்
ஜன 31, 2024 17:49

ஒரு நீதிபதி மாறி , அவர் இந்த ஆநந்த் வெங்கடேஷ் அவர்களை விட மிகவும் கண்டிப்பானவராக -நேர்மையானவராக இருந்தால் - மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்தான் வேண்டும் என்று மனு தாக்கல் செய்வீர்களா ?


Kasimani Baskaran
ஜன 31, 2024 23:32

நூற்றுக்கணக்கான பேரிடம் வேலை வாங்கித்தருகிறேன் என்று மோசடி செய்து பணத்தை திரும்பிக்கொடுத்ததாக சொல்பவனை உத்தமன் என்று கொண்டாடுகிறாயா? திருந்த வேண்டியது சிறையில் இருக்கும் வசூல் மெசின் இல்லடே நீதான்...


மேலும் செய்திகள்





புதிய வீடியோ