உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசுக்கு பயம் ஏன்? கேள்வி கேட்கிறார் பழனிசாமி

தி.மு.க., அரசுக்கு பயம் ஏன்? கேள்வி கேட்கிறார் பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரிப்பதில் தி.மு.க., அரசுக்கு என்ன பயம்?,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக தி.மு.க., அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி, முடக்க நினைத்தே இந்த மேல்முறையீட்டை தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ., இந்த வழக்கை விசாரிப்பதில் தி.மு.க., அரசுக்கு என்ன பயம்? கள்ளச்சாராய மரணங்களுக்கு ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற அரசின் அலட்சியப் போக்கே காரணமாக இருக்க, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார் இதனை விசாரிப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்? சுப்ரீம் கோர்ட்டில் உரிய சட்டப் போராட்டத்தை நடத்தி, மரணித்த 67 உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட அ.தி.மு.க., தொடர்ந்து போராடும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

joe
டிச 07, 2024 15:06

திமுக என்றாலே திருடன் என்றும், ஊழலே கொள்கை என்பதும் 100% மேல் சாதி ஊழல் என்பதும் உண்மையே.


PARTHASARATHI J S
டிச 06, 2024 07:03

சீ பீ ஐ வழக்குகளை உரிய நேரத்தில் விசாரித்து முடிப்பதில்லை. அவர்களிடம் தமிழில் விசாரிக்க ஆட்கள் குறைவு. மோடிஜி இந்த குறைகளை சரி செய்ய வேண்டும். ஏழை மதுப்பிரியர்கள் மனச்சாட்சியோடு நடந்தால் நல்லது. லோக்கல் போலிஸ் தண்டம். கள்ள சாராயம் காய்ச்சிறவன் குறைந்த விலைக்கு ஏதோ விற்று திமுக ஆட்களையும் நல்லா கவனிச்சுக்கிறான். இது ஊரறிந்த ரகசியம். சிபிஐ விசாரணையினால் அரசு செலவு. விமான கம்பெனிக்குத்தான் லாபம்.


Gokul Krishnan
டிச 05, 2024 20:55

அ தி முக ஆட்சியில் எதற்கு எடுத்தாலும் சி பி ஐ விசாரணை வேண்டும் என்று ஆளுநர் மாளிகைக்கு நடையாய் நடந்தது சட்டசபையில் சட்டையை கிழித்து கொண்டு வெளியே வந்த மகா வீரர் யார்


S.L.Narasimman
டிச 05, 2024 19:54

இவிகளுக்கு கள்ளச்சாரயம் விற்றால் என்ன சாராயம் குடித்து செத்தால் என்ன. கொள்ளை அடிக்கணும். எலெக்சனப்ப நம்ம குடிமக்களுக்கு அதிலே 1000மோ 2000மோ பிரியாணியுடன் குவாட்டரும் கொடுத்தால் வோட்டு போட்டு ஜெயிக்க வைக்க போறாங்க. நல்ல தமிழக மாடல்.


வைகுண்டேஸ்வரன்
டிச 05, 2024 19:51

சி பி ஐ விசாரிச்சிட்டு போகட்டும் னு விட்டு விட வேண்டும். இந்த வழக்கு மண்ணோடு மண்ணாகப் புதைக்கப் பட வேண்டுமென்றால் சி பி ஐ கிட்ட விடறது தான் சிறந்த வழி. கடந்த 10 ஆண்டுகளில் 6903 வழக்குகள் சி பி ஐ யிடம் இருக்கின்றன. இதில் 4288 வழக்குகள் 10 லிருந்து 20 ஆண்டுகளாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 361 வழக்குகளில் விசாரணை 22 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த தகவல் உள்துறை அமைச்சக இணைய தளத்தில் இருக்கிறது.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 05, 2024 18:49

40 க்கு 40 வாங்கியவன் பயப்படுகிறான் 40 க்கு ZERO மார்க வாங்கியவன் சிரிப்பானாம் என்ன உன் நிலை இப்படி ஆகி வீட்டதே


sundarsvpr
டிச 05, 2024 17:38

இலவசம் பெற தகுதி உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் இலவசம் பெரும் அநீதிக்கு தயாராக இருக்கும்வரை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.


sankar
டிச 05, 2024 16:52

உண்மையிலேயே இதில் சறுக்கிவிட்டார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 16:19

க சாராயம் காய்ச்சுவோருடன் சமூக விரோத திராவிட மாடலுக்கு இருக்கும் ஒப்பந்தமெல்லாம் வெளிவந்துவிடுமே ????


முக்கிய வீடியோ