உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதியவாதிகளிடம் ஏன் அரசு தோற்கிறது? * வி.சி., -கட்சி எம்.பி., ரவிகுமார் கேள்வி

ஜாதியவாதிகளிடம் ஏன் அரசு தோற்கிறது? * வி.சி., -கட்சி எம்.பி., ரவிகுமார் கேள்வி

சென்னை:'ஜாதியவாதிகளிடம் ஏன் அரசு தோற்று போகிறது?' என, வி.சி., எம்.பி., ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பட்டியலினத்தை சேர்ந்த சின்னதுரை மீது, மற்றொரு சமூகத்தினர், 2023ல் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, 'ஆன்லைன்' வாயிலாக பழகிய சிலர், சின்னதுரையை நேற்றுமுன்தினம் தாக்கியுள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் மற்றும் வேங்கைவாயல் உள்ளிட்ட பலவற்றில், பட்டியலின மக்கள் பாதிக்கப்படும்போது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். அதை வெளிப்படுத்தும் விதமாக, 'சமூக நீதி பேசும், தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், பட்டியலின மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க., இருப்பதில்லை' எனக்கூறி, முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக, வி.சி., கட்சியினர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். தேர்தல் வர இருப்பதால், 'தி.மு.க., அரசை கண்டித்து, எவ்வித விமர்சனங்களையும் முன் வைக்க கூடாது' என, வி.சி., தலைமை அறிவுறுத்தியது. இந்நிலையில், நாங்குனேரி சின்னத்துரை மீது தாக்குதல் நடந்திருப்பது, வி.சி., கட்சியினர் இடையே, தி.மு.க., மீதான கோபத்தை அதிகரித்துள்ளது.இது தொடர்பாக, அக்கட்சி எம்.பி., ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சனாதனவாதிகளை எதிர்ப்பதில் அரசு வெற்றி கண்டுள்ளது. ஆனால், ஜாதியவாதிகளிடம் ஏன் தோற்றுப் போகிறது?' என, கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை