உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் ஓட்டுப்பதிவில் சுணக்கம் ஏன்: ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் ஓட்டுப்பதிவில் சுணக்கம் ஏன்: ராதாகிருஷ்ணன் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.தமிழகத்தில் நேற்று ( ஏப்.,19) நடந்த லோக்சபா தேர்தலில் சென்னையில் குறைந்த அளவு ஓட்டு பதிவாகி உள்ளது.இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஓட்டுப் போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் அதிகமான ஓட்டுப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்து இருந்தால், இந்த ஓட்டுப்பதிவு சதவீதமும் வந்து இருக்காது. வெயிலின் காரணமாக பகலுக்குப் பிறகு வாக்காளர்கள் இடையே சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.அதேபோல், அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் பலரும் ஓட்டுப் போட வருவதற்கான முயற்சிகளை எடுக்க தயங்குகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அதிகளவு ஓட்டுப்பதிவை மேற்கொள்ள மண்டல அளவிலான அதிகாரிகள் மூலமாக நாங்கள் பல முயற்சிகள் மேற்கொண்டோம். தொடர் விழிப்புணர்வு மூலம் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Nagarajan S
ஏப் 23, 2024 15:24

ஆதார் கார்டு லிங்க் செய்thaalல் சரியாகி vidum


Bye Pass
ஏப் 22, 2024 22:14

வாக்காளர்களுக்கு குளிர்விக்கப்பட்ட சரக்கு தரலாம்


Kanagaraj M
ஏப் 22, 2024 11:52

வாக்குக்கு காசு வாங்குபவர்கள் மட்டும் நேர்மையாக வந்து வாக்கு செலுத்திவிட்டு செல்கின்றனர்


Raa
ஏப் 22, 2024 11:03

இதெல்லாம் ஒரு விளக்கமா? ஒரு திறமையான IAS ஆபீசர் எப்படி பதில் சொல்ல கூடாது என்பதற்கு இவர் விளக்கம் ஒரு உதாரணம்


அப்புசாமி
ஏப் 21, 2024 11:36

கொளுத்தும் வெயிலில் கடைக்குக் கூட வெளியே வரமாட்டாங்க.


Lion Drsekar
ஏப் 21, 2024 11:00

அகப்பட்ட வரையில் சுரட்டுவதையே வரி என்ற பெயரில் வசூலித்தால் யாருக்குதான் கோவம் வராது வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் பொது மின்சாரத்துக்கு கடைகளுக்கு போடப்படும் தொகையில் மின்சார கட்டணம் ? சுய தொழில் வைத்திருப்பவர்களுக்கு வருமானமே இல்லை ஆனால் அவர்களுக்கு கொடுமையான வரிகள் ? இப்படியே போனால் முடியாட்சி மன்னர்களின் குடும்பங்கள் மட்டுமே வாக்களித்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் மக்களை மக்களாக பார்த்தல், நடத்தினால் தாங்களாக முன்வந்து மழை வெய்யில் பாராமல் வாக்களிப்பார்கள், இன்றைக்கு அடுத்த வேளை சோற்றுக்கு அழி இல்லாதவன் பல லட்சம் கோடிக்கு அதிபதி என்றாகிவிட்டது , இப்படி இருக்க தகுதி, திறமை, எல்லாம், வேரோடு அழிக்கப்பட்டுவிட்டது , பணம் செல்வாக்கு இவைகள் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது வந்தே மாதரம்


Bye Pass
ஏப் 22, 2024 22:12

நியூ யார்க் நகர மக்கள் ஒன்றிய அரசுக்கும் ஸ்டேட் அரசுக்கும் நியூ யார்க் நகரத்துக்குமாக மூன்று வருமான வரி கட்டுகிறார்கள் இதை தவிர GST எனும் சேல்ஸ் டாக்ஸ் குறைந்த பட்சமாக மற்ற நகர மக்களுக்கு சதவிகித வரி விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது அரபு நாடுகளில் GST நடைமுறையில் இருக்கிறது என்ன சேகர் காட்டுவாழ்க்கையா வரி இல்லாம அரசாங்கம் நடத்த


Subramanian
ஏப் 21, 2024 09:02

First don't it as a holiday Those who vote and come and show proof, give them a paid leave Second don't keep it at the weekend Keep it at the middle of the week Don't run special buses and trains for the people you go to their home town Let the employer insist on getting their employees register themselves as voter where they are employed


sridhar
ஏப் 21, 2024 07:21

This is a classic example of how not to conduct an election TN election officials need to be sacked summarily


Baskaran
ஏப் 21, 2024 07:17

வெளியூரில் பணி செய்பவர்கள் எந்த இடத்தில் தங்கியிருக்கீற்றர்களோ அங்கேயே ஒட்டு போட அனுமதிக்க வேண்டும் அப்போழுதான் வாக்கு விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது


VS BALASUBRAMANIAN
ஏப் 21, 2024 07:06

People know that nobody is going to improve Chennai Better be happy with Mosquitoes, corporation water in lorry They have seen many corporation commissioners wearing cartoon shirts


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ