| ADDED : டிச 04, 2025 10:14 AM
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணலி புதுநகரில் 238 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'யு டர்ன்' அடித்து, புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 9 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8.30 மணி வரை பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:மணலி புதுநகர்- 238.2எண்ணூர்- 212.5விம்கோ நகர்- 201.6கத்திவாக்கம்-158.7மணலி- 123.4திருவொற்றியூர்- 105.6திண்டிவனம் 115 ஊத்துக்கோட்டை 113 பொன்னேரி 99 சோழவரம் 95தண்டையார்பேட்டை- 70.2புழல்- 61.2பாரிஸ்- 59.2காசிமேடு- 58.6பேசின் பிரிட்ஜ்- 49.8அம்பத்தூர்-45கொரட்டூர் - 40.8கொளத்தூர் -37.2மதுரவாயல்- 28.5வேளச்சேரி- 28.2சென்னை சென்ட்ரல் -27.6அமைந்தகரை- 26.4நுங்கம்பாக்கம்- 25.2நெற்குன்றம்- 23.8வளசரவாக்கம்- 23சோலிங்கநல்லூர்- 22.4நுங்கம்பாக்கம்- 21.6சைதாப்பேட்டை- 20.8வளசரவாக்கம்- 19.4பெருங்குடி-19.2வடபழநி- 18சாலிகிராமம்- 17.6முகலிவாக்கம் - 17.4அடையார்- 17.1ஆலந்தூர்-16.1