உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை முன்னெச்சரிக்கை; 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கை; 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகை, கரூர், அரியலூர், மதுரை, கடலூர் ஆகிய 17 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,24) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவ.,26) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.இதுவரை கனமழை காரணமாக இன்று (நவ.,24) பள்ளிகளுக்கு மட்டும் 10 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* தூத்துக்குடி * ராமநாதபுரம் * திருவாரூர் * கள்ளக்குறிச்சி* புதுக்கோட்டை* திருச்சி * தஞ்சாவூர்* மயிலாடுதுறை* விருதுநகர்* சிவகங்கை* நாகை* கரூர்* அரியலூர்* மதுரை* கடலூர்கனமழை காரணமாக இன்று (நவ.,24) பள்ளி, கல்லூரிகளுக்கு 2 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* திருநெல்வேலி* தென்காசி

கனமழை எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவ.,24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதேபோல், கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை