உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?

அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என, தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். பஹல்காம் சம்பவத்துக்கு அரசு நிச்சயம் பதிலடி தரும். இதில் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்.சுற்றுலா சென்றவர்களை வரிசையில் நிறுத்தி, முஸ்லிமா, ஹிந்துவா எனக் கேட்டு, அதன்பின் ஹிந்துக்களை மட்டும் பயங்கரவாதிகள் சுட்டதாக, பாதிக்கப்பட்டோர் பேட்டி கொடுத்து உள்ளனர். ஆனால், தாக்குதலுக்குப் பின், காயமடைந்தவர்களை காப்பாற்ற முதலில் வந்தவர்கள் முஸ்லிம்கள் தான். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.நம் நாட்டில் முஸ்லிம்கள், ஹிந்துக்கள் அனைவரும் சமம் தான். ஆனால், பயங்கரவாதிகளின் மனநிலை அப்படி இல்லை. நான் உள்துறை இணை அமைச்சர் ஆகப் போவதாக செய்தி பரப்புகின்றனர். இன்று வரை உங்களோடு தான் நான் இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

இராம தாசன்
ஏப் 24, 2025 23:10

அங்கே இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் தானே/ அவர்களும் மனிதர்கள் தான். 95% இஸ்லாமியர்கள் நல்லவர்கள் / மீதம் உள்ளவர்களால் அந்த 95% நல்ல உள்ளங்களுக்கு கெட்ட பெயர்


venugopal s
ஏப் 24, 2025 07:17

அப்படியே சந்தடி சாக்கில் தமது மத்திய அமைச்சர் ஆகும் ஆசையை வெளியே காண்பித்து விட்டார்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை