சென்னை - துாத்துக்குடிக்கு பகல் நேர ரயில் இயக்கப்படுமா?
சென்னை:தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கிற்கு, துாத்துக்குடி மாவட்ட பயணியர் நலச்சங்கத்தினர் அனுப்பிய கோரிக்கை மனு: கொரோனா காலத்துக்கு முன், துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல்நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில், வாஞ்சி மணியாச்சியில் இருந்து, குருவாயூர் விரைவு ரயிலில் இணைக்கப்பட்டது. தற்போது, நான்கு ஆண்டுகளாக ரயில் இயக்கப்படாமல் உள்ளது.இதேபோல, சென்னை- - துாத்துக்குடி இடையே பகல்நேர ரயில் இயக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ரயில், சாதாரண கட்டணத்துடன் பயணிக்க துாத்துக்குடி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பகல்நேர ரயில் இயக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.