உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா ?: திருமா குமுறல்

தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா ?: திருமா குமுறல்

சென்னை : ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளைக் காப்பதற்காகவே, தி.மு.க., கூட்டணியில் வலியோடும், ஏமாற்றத்தோடும் இருக்கிறோம்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.சென்னை புளியந்தோப்பில், நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக் கூட்டம் நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zgfgnry3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், திருமாவளவன் பேசியதாவது:ஈ.வெ.ரா., தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பேசினார் என்றால், அவர் தமிழை இழிவுபடுத்தவில்லை. தமிழில் புராணங்கள் உள்ளன; அவற்றை தான் எதிர்த்தார். காட்டுமிராண்டி காலத்தில் எழுதிய புராணங்கள் உள்ளன.அதனால், தமிழை திட்டினார். பெற்ற பிள்ளையை தாய் திட்டுவது போல், தமிழை விமர்சித்து பேசினார்; அது தவறா?எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் ஈ.வெ.ரா., கடினமாக எழுதுவதை செம்மைப்படுத்தினார்; 247 எழுத்துக்கள் தேவையில்லை என்று கூறியவர். அப்போது எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறை செய்தவர் எம்.ஜி.ஆர்.,ஈ.வெ.ரா., ஹிந்து மதத்தை மட்டும் விமர்சித்தார் என்றால், அவர் அந்த மதத்தைச் சேர்ந்தவர். அதனால், வேறு மதத்தை விமர்சிக்க முடியாது என்பதும் ஒரு காரணம்.உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் எத்தனை பேர் நீதிபதிகளாக இருக்கின்றனர்? ஆதிதிராவிடர் எவ்வளவு பேர் உள்ளனர்? எப்போதாவது ஒருவர் இருப்பார்!'விடுதலை சிறுத்தைகள் கொடி ஏற்றினால், கொடியை பிடுங்கி போடு' என்கிறார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்கள், சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும்; அது தான் ஜனநாயகத்தின் சிறப்பு. இதை தான் அம்பேத்கர் சொன்னார். ஆனால், தற்போது சிறுபான்மையினர் நசுக்கப்படுகின்றனர்.தி.க., எதிர்க்கிறதோ இல்லையோ, நான் எதிர்ப்பேன். தி.மு.க., எதிர்க்கிறதோ இல்லையோ, நான் சனாதனத்தை கடுமையாக எதிர்ப்பேன்.இரண்டு மாதங்களுக்கு முன், என்னையே பகடைக் காயாக உருட்டப் பார்த்தனர்; ஆனால், சிறுத்தை சிக்கவில்லை. நீங்கள் நினைப்பது போல் திருமாவளவன் இல்லை. தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம்; ஆனால், மனநிறைவோடு இருக்கிறோம் என சொல்ல முடியாது.தி.மு.க.,வோடு பயணிக்கும்போது, விமர்சனங்கள் இல்லாமல் இல்லை; வலிகள் இல்லாமல் இல்லை; ஏமாற்றங்கள் இல்லாமல் இல்லை. ஆனாலும், ஈ.வெ.ரா., கொள்கைகளை காப்பதில் உறுதியாக இருக்கிறோம்.அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற அறிஞர்களின் சிந்தனைகளை பாதுகாப்பதில், வலிகளை தாங்கிக் கொண்டு தேர்தல் முடிவுகளை எடுக்கிறோம். அதை புரிந்து கொள்ள, உங்களுக்கு அரசியல் ஞானம் தேவைப்படும். இல்லையென்றால், மேம்போக்கில் எங்களை விமர்சிப்பீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.தி.மு.க., கூட்டணியில், தான் அதிருப்தியுடன் தொடர்வதாக திருமாவளவன் மீண்டும் கூறியிருப்பது, கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

'கெடுபிடியை கைவிடுங்கள்!'

'வேங்கைவயல் கிராமத்தில் போராடி வரும் மக்கள் மீது, போலீசாரின் கெடுபிடியை கைவிட வேண்டும்' என, திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் தான் குற்றவாளி என, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 'பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக மாற்றுவதை ஏற்க முடியாது' என, அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:வேங்கைவயல் கிராமத்தில், மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களை அங்கே சென்று சந்திப்பதற்கு, போலீசார் கெடுபிடிகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. போலீசாரின் இந்த கெடுபிடி நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதுகுறித்து, தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 82 )

Venkatesan Ramasamay
பிப் 02, 2025 11:53

கொஞ்சம் பொறு பிளாஸ்டிக் சேர் குருமா.. இப்பதான் த. வெ. க. வில் ஆடு வாங்கியிருக்கிறாங்க.. அதுக்குள்ள பிரியாணி திங்க அலையாத...ஏன்? தி. மு. க. கூட்டணில பிரியாணி தின்ணு அலுத்துபோசாக்கும் ... நீ எந்த கூட்டணில போயி சேர்ந்தாலும் உனக்கு கிடைக்கிற மரியாதை பிளாஸ்டிக் சேரும் பிரியாணியும்தான் ....என்னா ...புரியுதா..


M Ramachandran
பிப் 01, 2025 14:30

நீயும் உறுப்புட மாட்டே. தமிழ் மக்களையும் உறுப்புட விட மாட்டே. மேய்யர மட்டை ...மாடு கெடுத்தது போல.


M Ramachandran
பிப் 01, 2025 14:27

உண்டு கொழுத்தது தீ மு க்க பணத்திலேயே. அப்புறம் எப்படி சோரம் போவது


Minimole P C
ஜன 31, 2025 07:46

Thiruma principles are loot along with ruling party in the same of sanathanam etc. Until he is the so called leader of the dalits, those young people wont comeup in life. He always talks of rights of the dalits but but not the responsibilities of a genuine citizen. He is not bothered about nation as whole and its itegrity etc. An evil force or rather fate of TN.


krishna
ஜன 30, 2025 22:05

ULAGA MAHA KOZHAI INDHA KURUMA. NO VEKKAM NO MAANAM NO SOODU NO SORANAI. INDHA KOMALI CHIDAMBARAM TIRUCHENDUR KOVILIL VIZHUNDHU KUMBITTA PODHU SANAADHANAM ENNA ENA THERIYAADHA .BEGGERS HAD NO CHOICE.ELECTION VANDHAA AZHVAADALUL SEAT PICHAIKKU NIPPAR IDHU ORU KATCHI.IDHUKKU THONDARGAL VERA.ASINGAM.


Barakat Ali
ஜன 30, 2025 21:00

கள்ளப்புருச்சன் மேல ஆச .... புருச்சனை உட்டு போனா, அவனும் அம்போ ன்னு உட்டு ஓடிட்டா நாசமா போயிருவோமோ ன்னும் ஒரு பயம் ....


BalaG
ஜன 30, 2025 19:14

வேற எவன் உம்மை சேர்த்துப்பான்


Madras Madra
ஜன 30, 2025 17:11

சனாதனத்தை எதிர்ப்பது என்றால் என்ன ? திமுக தலைமை குடும்பத்தில் முதலில் சனாதனத்தை ஒழிக்க முடியுமா ? உங்கள் குறிக்கோள் தான் என்ன ? சிறுபான்மை மதத்தை வளர்த்து விடுவதா ? இல்லை பட்டியல் இன மக்களை முன்னேற்றுவதா ? எதுவும் இல்லை. நீங்கள் கையால் ஆகாதவர் அதை மறைக்க இதெல்லாம் உருட்டு கிறீர்கள் பட்டியல் இன மக்கள் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்கள் உங்களை போன்றோர்தான் குழப்பி மீன் பிடிக்கிறீர்கள்


winv ent
ஜன 30, 2025 17:20

மானங்கெட்ட மானஸ்தனய்யா நீர்.. உமக்கா இந்த நிலைமை.


Suppan
ஜன 30, 2025 16:46

அடித்துவிடுகிறார் . எழுத்து சீர்திருத்தம் பல நூற்றாண்டுகளாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறது. தற்பொழுது உள்ள எழுத்துக்கள் குருசாமியால் கொண்டுவரப்பட்டவை. ராம் சாமியால் அல்ல . தாயுள்ளத்தோடுதான் அந்த 21 ம் பக்கம் எழுதப்பட்டதா? ராம் சாமி திட்டாத ஆசாமி உண்டா. திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் , பிராமணர்கள், தலித்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இன்ன பிற. இதற்கெல்லாம் திருமாவின் மூட்டுக்களை எதிர்பார்க்கிறோம் . மிரட்டல் வந்தவுடன் இஸ்லாத்தை சாடுவதை நிறுத்த வேண்டி வந்தது. பெட்டி வந்தவுடன் கிறிஸ்தவத்தை ஆதரிக்க ஆரம்பித்தது வரலாறு.


ஆரூர் ரங்
ஜன 30, 2025 15:02

இன்னுமா உங்க தலித் மக்கள் உங்களை நம்புறாங்க?. பொம்மி நாயக்கன்பட்டி கிராமத்தில், 2018ல் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவம் நடந்தபோது இதே திருமாவளவன் முஸ்லிம்கள் பக்கம் ஒருதலைப்பட்சமாக நின்ற புகாருண்டு.