உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்தவர் சாதனைக்கு உரிமை கோருவதா?

அடுத்தவர் சாதனைக்கு உரிமை கோருவதா?

செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சென்னை மற்றும் சுற்றியுள்ள மக்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று வருவதை எளிதாக்கவும், கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகை யிலும், 2018ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலைய பணிகள் துவங்கின.தற்போது அங்கு, 'கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையம்' என்ற பெயரில் பஸ் நிலையம் திறக்கப்பட்டு, கூடவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. சில தனியார்கள் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலத்தை, அப்போதைய அ.தி.மு.க., அரசு நீதிமன்றத்தின் வாயிலாக பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி மீட்டது.இதற்காக, அரசு அதிகாரிகள் அல்லும் பகலும் நீதிமன்ற வாசலிலேயே படுத்து கிடந்தனர். அரசு பணியை தங்களது சொந்த பணி போல அர்ப்பணிப்புடன் செய்தனர். அரசுக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்து, அதன்பின், அ.தி.மு.க., ஆட்சியிலேயே, பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன.காலம் மாறி, காட்சியும் மாறியது. 2021-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணியை தொடர்ந்தது. கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் பணிகள் முடிந்து, தற்போது கடைசியாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், பல தடைகளை வென்று பேருந்து நிலையம் கொண்டு வர பெருமுயற்சி எடுத்த அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகள் மறைக்கப்பட்டு, பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டி, அவரது சிலையும் வைக்கப்பட்டுள்ளது.இதே பாணியில், 6,218 அரசு பள்ளிகளில் காலங்காலமாக செயல்பட்டு வரும் தமிழ் மன்றங்களின் பெயர்களை, 'முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம்' என்று பெயர் மாற்றி, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படி, பிறர் சாதனைக்கு சொந்தம் கொண்டாடுவதும், எல்லா திட்டங்களுக்கும் கருணாநிதி பெயர் சூட்டுவதும் எந்த வகையிலும் சரியல்ல.தி.மு.க., சார்பில் கட்டப்படும் கட்டடங்களில், கருணாநிதிக்கு ஒரு சிலை என்ன, ஓராயிரம் சிலைகளை கூட வைத்துக் கொள்ளட்டும். மாறாக, மக்களின் வரிப்பணத்தில் இப்படி பெயர் சூட்டுவதும், சிலைகள் நிறுவுவதும் மக்களின் அதிருப்திக்கு ஆளாகும் என்பதில் சந்தேகமே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Barakat Ali
ஜன 07, 2024 19:41

சிலைவணக்கத்துக்கு எதிரானது இஸ்லாம் ...... ஆனால் சக இஸ்லாமியர்கள் யாரும் திமுகவின் இந்த இழிசெயலைக் கண்டிப்பதில்லை ......


Kalyanaraman
ஜன 06, 2024 22:26

500-1000 ரூபாய்க்கு ஓட்டை விற்க தன்மானத் தமிழன்கள் இருக்கும்போது என்ன கவலை ? அதிருப்தியாவது மண்ணாங்கட்டியாவது. அதிருப்தி அடைந்தவர்கள், அடைபவர்கள் இவர்களுக்கு எதிராக ஓட்டு போட்டாலும் அது மூன்றாக சிதறி மீண்டும் இவர்கள்தானே வாய்ப்பு.


கனோஜ் ஆங்ரே
ஜன 06, 2024 19:54

/////அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகள் மறைக்கப்பட்டு, பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டி/// சரி... நீங்க சொல்றது நியாயம்தான்.. ஏற்றுக் கொள்ளலாம். ஆனால்.... கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாகிட... திட்டம் தீட்டி, நிலம் வாங்கி... திட்டமிட்டு அவ்வளவு பெரிய பேருந்துநிலையத்தை நிர்மாணித்து... கட்டிடம் கட்டியது கலைஞர். ஆனால்... நீங்க சொல்ற அதிமுக தலைவி ஜெயலலிதா திறந்துட்டு, கலைஞர் பேரை இருட்டடிப்பு செஞ்சாங்களே... இது சரியா அறிவாளியே.... “முற்பகல் செய்யின்... பிற்பகல் தாமே விளையும்”... போதுமா...? ரொம்ப பொங்காத....?


DVRR
ஜன 06, 2024 19:23

கருணாநிதி நாடு என்று டாஸ்மாக்கினாட்டு பெயர் மாற்றப்படப்போகின்றது சீக்கிரம்


அப்புசாமி
ஜன 06, 2024 16:28

குஜராத்யின் கிரிக்கெட் ஸ்டேடியத்தை சொந்தப்பணத்தில்.கட்டுனாரு, பேரு வெச்சுக்கிட்டாரு. இல்லியா


ஆசாமி
ஜன 06, 2024 16:49

அது வரிப்பணம் இல்லை தனியார் அமைப்பு பணம்.


jaya
ஜன 06, 2024 17:43

குஜராத் மாடல் அரசு , திராவிட மாடல் ன்னு ஏன் உரூட்டுறீங்க...


Barakat Ali
ஜன 06, 2024 15:15

யாரும் திமுகவின் இந்த இழிசெயலைக் கண்டிப்பதில்லை ......


ஆரூர் ரங்
ஜன 06, 2024 14:12

அப்படியெல்லாம் இல்லை. 4000 கோடி சென்னை பாக்கேஜ்க்கு பயனாளியான விடியலின் பெயரை வைத்தோமா?


Anand
ஜன 06, 2024 13:15

அதான் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் அல்லவே, அணைத்து தில்லாலங்கடி செயல்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரு பெயர் "திராவிட மாடல்" என்று...


R. Vidya Sagar
ஜன 06, 2024 13:09

காகங்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த ஆட்சியிடம் நாங்கள் ஆய் போக இடம் கிடைக்க வில்லை என்று ஒன்றாக முறையிட்டதால், இந்த ஆட்சி மிகுந்த கருணையுடன் எடுத்த நடவடிக்கையை எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள்


கருத்து சுந்தரம்
ஜன 06, 2024 12:54

KCBT என்றால் Kilambakkam Central Bus Terminus.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை