உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோரிக்கை நிறைவேறுமா?: தொடர்ந்து குரல் கொடுக்கும் டாக்டர் சங்கத்தினர்!

கோரிக்கை நிறைவேறுமா?: தொடர்ந்து குரல் கொடுக்கும் டாக்டர் சங்கத்தினர்!

சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு மறைந்த மருத்துவப் போராளி டாக்டர் லட்சுமி நரசிம்மனின் 4வது நினைவு தினத்தையொட்டி, தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: நாளை பிப்ரவரி 7ம் தேதி மருத்துவர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற டாக்டர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்து, நான்காவது நினைவேந்தல் தினம் நடக்கிறது. டாக்டர் லட்சுமி நரசிம்மன் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்தது மட்டுமன்றி, சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடரின் போது, மருத்துவர்களின் பேராதரவோடு பேரிடர் பகுதிகளில் வாரக்கணக்கில் களமிறங்கி பணியாற்றியது மற்றும் குன்னூர் தடுப்பூசி நிறுவனம் மூடப்பட்டதை எதிர்த்து போராடியது உள்பட இந்த சமூகத்துக்கும், மருத்துவ துறைக்கும் செய்தது ஏராளம்.சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளரிடம் முதல்வர் ஸ்டாலின் கருணாநிதியின் அரசாணை 354ஐ நடைமுறைப் படுத்துவதில் என்ன சிரமம் என்று கேட்டால், அடுத்த நிமிடமே கிடப்பில் போடப்பட்டுள்ள அரசாணைக்கு உயிர் கிடைத்து விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ