உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ‛குஜராத் மாடலை பின்பற்றுமா தமிழக அரசு: இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் கேள்வி

 ‛குஜராத் மாடலை பின்பற்றுமா தமிழக அரசு: இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் கேள்வி

மதுரை: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிலாக குஜராத் மாநிலத்தைப் போல தமிழகத்திலும் மாநில அரசு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என தமிழக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: பயிர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகள் பிரீமியத் தொகை செலுத்தும் போது பேரிடரால் ஏற்படும் இழப்புக்கான தொகை வழங்கப்படும். இதற்காக தமிழகத்தில் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம், 15 தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வந்த நிலையில் அதை விடுத்து தனியார் நிறுவனங்களை மட்டும் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்து, பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடே கிடைக்கவில்லை. காப்பீட்டுத்தொகையே எட்டாக்கனியாகி விட்டது. அரசும் வேளாண் துறையும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தான் செயல்படுகிறது. குஜராத் மாடல் வேண்டும் குஜராத்தில் பிரதமர் காப்பீட்டுத் திட்டம் செயல்படவில்லை. அந்த மாநில அரசே தனியாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதால் பேரிடர் பாதிப்பு ஏற்படும் போது மாநில அரசே நேரடியாக இழப்பீடு வழங்குகிறது. தமிழகத்தில் அதுபோலிருந்தால் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் தேவையில்லை. அல்லது பொதுத்துறை நிறுவனமான தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு காப்பீடு செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை