ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையுமா தமிழக அரசு?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மற்றும் படிகள், 2009ல் மாற்றி அமைக்கப்பட்டன. அதற்கு முன், இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 ரூபாயாக இருந்தது. இந்த திருத்தத்திற்கு பின், 5,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், 2009 ஜூன் 1ம் தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், 25,000 ரூபாய் வரை குறைவான ஊதியம் பெறுகின்றனர். இந்த ஊதிய முரண்பாட்டை களைய, 2018ல் அவர்கள் போராடியபோது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., ஆட்சி அமைத்ததும் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். தற்போது வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெறச் செய்து, அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது. தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். - பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்