உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2ஜி வழக்கு விசாரணையில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்: அண்ணாமலை பகீர்

2ஜி வழக்கு விசாரணையில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்: அண்ணாமலை பகீர்

சென்னை: 'காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், '2ஜி' அலைக்கற்றை ஊழல் வழக்கில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க., பைல்ஸ்' பாகம் மூன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார்.அதில், 2ஜி வழக்கு தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் உரையாடல் இடம்பெற்றிருந்தது.நேற்று, மூன்றாம் பாகத்தின் இரண்டாவது ஆடியோவை வெளியிட்டு உள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: '2ஜி' விசாரணையின் போது, சி.பி.ஐ., விசாரணையை தி.மு.க., எப்படி கையாண்டது என்பது பற்றிய உண்மையை ஆதாரங்களுடன் வெளியிடும் எங்கள் முயற்சியே இந்த ஆடியோ பதிவு. அடுத்தடுத்தும் அதிர்ச்சியளிக்கும் பல ஆதாரங்கள் அம்பலத்துக்கு வரும். தி.மு.க., பைல்ஸ் பாகம் - 3ன் இரண்டாவது ஆடியோவில், தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜா, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் இடையேயான உரையாடல் பதிவு இடம் பெற்றுள்ளது.2ஜி வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளி. வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்ய சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2ஜி விசாரணயை இப்படி தான் நடத்தியது.ஊழலை மறைக்க நடத்தப்பட்ட செட்டப் நாடகங்கள் இத்துடன் முடிவதில்லை; தொடர்ந்து வெளிவரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆடியோவில் ஆ.ராஜா, ஜாபர் சேட் உரையாடல் விபரம்:ராஜா: எங்கே சார் இருக்கீங்க.ஜாபர்சேட்: சார் சொல்லுங்க.ராஜா: ஒண்ணும் இல்லை. நல்ல செய்தி தான், நல்லா போயிட்டிருக்கு.ஜாபர்சேட்: வெரி குட் சார்.ராஜா: அவர்கள் எல்லாம் வந்து போயிட்டாங்க. அவர்களே அதை ஒருங்கிணைத்து விட்டனர்.ஜாபர்சேட்: சரிங்க சார்.ராஜா: அவர்கள் பிரச்னையை நன்கு கண்காணித்தனர். ஜாபர்சேட்: நாம சொன்ன பிரச்னைகளா?ராஜா: நம்ம பிரச்னைகள் எல்லாம் வராமா பார்த்துக்கறேன்னாங்க. வேற ஒரு அரெஞ்மென்ட்ல. நேற்று ஒருத்தர், 'ஜாயின்' பண்ணார்ல அவர்கிட்ட சொல்லி.ஜாபர்சேட்: நேற்று யார் சார் ஜாயின் பண்ணாங்க.ராஜா: அந்த அமைப்புக்கு தலைமை.ஜாபர்சேட்: ஏபி. ஆமா, ஆமாம்...ராஜா: நம்மாளுங்க வச்சு, பாம்பே ஆளுங்க நம்மாளுங்க வச்சு, ஆழ்வார்பேட்டையில் எதெல்லாம் வர வேண்டும், எதெல்லாம் வரக்கூடாது பார்மாலிட்டி போட்டு.ஜாபர்சேட்: சரிங்க சார்.ராஜா: கேள்வி கேளுங்க, ஆனால் கடுமையாக கேட்கக்கூடாது.ஜாபர்சேட்: சரிங்க சார்ராஜா: அதுமாதிரி முடிச்சுட்டாங்கஜாபர்சேட்: சரிங்க சார். வெரிகுட். யார் பேசுனாங்க.ராஜா: ஸ்வான், யுனிடெக்.ஜாபர்சேட்: அவங்க ரெண்டு பேரும்.ராஜா: ரெண்டு பேரும் இப்ப நேரா வந்து, 'பென்ஸ்' காரில் வந்து பார்த்துட்டு, போயிட்டாங்க.ஜாபர்சேட்: சரிங்க சார்.ராஜா: ஒன்னுமில்லைனு நாங்க சொல்லிட்டோம், கவலைப்பட வேண்டாம்னு. ஒவ்வொன்றாக கேட்டனர். எங்களை 'அப்ரூவர்' ஆக்கிடுறேன். ஏதாவது சொல்ல முடியுமான்னு கேட்டனர். ஜாபர்சேட்: சார்...ராஜா: அதனால் என் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்றால், ஹரி சால்வேவை வைத்து கொண்டுள்ளனர். ஜாபர்சேட்: கொடுத்து இருக்காங்க.ராஜா: ஹரி சால்வே டேக் ஓவர் செய்து, இவங்க பக்கம் சொல்ல வேண்டியதெல்லாம், ராஜாவை எப்படி தெரியும், அமைச்சரை எப்படி போய் பார்த்தீங்கனு எல்லாம் சொல்லி.ஜாபர்சேட்: அந்த காப்பி மட்டும் கிடைச்சா நமக்கு.ராஜா: நான் காப்பி வாங்க சொல்றேன்.ஜாபர்சேட்: சரிங்க.தைரியாமாக வீட்டிற்கே வந்துட்டு, போயிட்டாங்க.ராஜா: அவ்வளவு தான்.ராஜா: அவர்கள், வேறு ஆபரேட்டர்கள் வாயிலாகவும் வேலை செய்றாங்க. ஜாபர்சேட்: நல்லது சார், சரியாக இருக்கும்.ராஜா: யுனிடெக், ஸ்வான் இருக்குல்ல.ஜாபர்சேட்: ஆமாம் சார்ராஜா: டேட்டா கான், வீடியோகான் இருக்குல்ல, அவர்களிடமும் இதை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. அதற்கு பின், எனக்கு கேள்விகள் கொடுப்பாங்களாம், இல்லைன்னா ஜென்டிலா கூப்பிடுவாங்களாம்.ஜாபர்சேட்: அவ்வளவு தான் பார்த்துக்கலாம் சார். அதோடு முடிஞ்சதுராஜா: அவர்கள், வெளிநாட்டிற்கு கூட போகவில்லையாம்; அவர்கள், எடிசாலாவிற்கு செல்ல விரும்புவதாக சொன்னார்கள்.இவ்வாறு அந்த உரையாடல் பதிவாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Barakat Ali
ஜன 18, 2024 20:26

திமுகவுக்கு ஊழல் செய்ய உரிமை இல்லை என்று ஏன் சொல்கிறார்கள் ????


J.Isaac
ஜன 18, 2024 20:12

செத்த பாம்பு


J.Isaac
ஜன 18, 2024 18:26

PMCARE கணக்கை காணோம்.


seshadri
ஜன 18, 2024 16:03

எல்லாம் இருக்கு எப்போ தண்டனை அது மட்டும் கிடையாது. எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள். தெரிந்தவர்களும் பாம்பும் கீரியும் சண்டை விட்டு கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் நடக்காது. பணம் இருக்கிறவர்களுக்கு சட்டம் நீதி எல்லாம் அடி பணியும் பணம் இல்லாதவர்களுக்குத்தான் சட்டம் நீதி எல்லாம்.


duruvasar
ஜன 18, 2024 14:12

யாராவது புரிய வைய்யுங்கப்பா கெடந்து தவிக்குது


நரேந்திர பாரதி
ஜன 18, 2024 13:54

இந்த ஊழல் மட்டைகளையெல்லாம் சிறையிலே அடச்சி தண்டனை வாங்கித்தரலாம்னு இன்னும் நீங்க நினைக்கிறீங்களா? சாதாரண மனிதனை நோண்டி நொங்கெடுக்கும் இந்த சட்ட திட்டமெல்லாம் அரசியல் வியாதிகளை ஒன்னும் செய்யாது


Sridhar
ஜன 18, 2024 11:45

இதுக்கும் மேல கோர்ட்டு ஒத்துக்கொள்ளர சாட்சியங்கள் ஏதாவது இருந்தா அதை அங்கெ கொடுத்து குற்றவாளிகளுக்கு சீக்கிரமா தண்டனை வாங்கிக்கொடுப்பதை விட்டுவிட்டு, சும்மா எதோ பரபரப்புக்கு ஆடியோ ரிலீஸ் பண்ணிட்டுருக்கீங்க.


Velan Iyengaar
ஜன 18, 2024 13:23

சும்மா உதார் விடுவதா மட்டுமே செய்யுது ...


J.Isaac
ஜன 18, 2024 10:37

Files என்று பேசி பேசி ...


J.Isaac
ஜன 18, 2024 10:35

வெட்டி கூட்டம்.


Paraman
ஜன 18, 2024 09:51

இந்த ஜாபர் சேட்ட பிடிச்சி உள்ளே வைத்து NIA. நொங்கெடுத்தால் மொத்த 21.ம் பக்க திராவிடியா ஈனப்பயல்கள் கூட்டத்தின் வண்டவாளம், ஆதாரங்கள் எல்லாம் தண்டவாளத்தில் வரும்.....இவன் ஒருத்தன நசுக்குற நசுக்களில் அணைத்து திராவிடியா ஊழல் கொள்ளை கூட்டத்தின் அணைத்து கொள்ளை விபரங்களும் இந்த நாடு மக்களுக்கு தெரிந்துவிடும் ...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை