உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் இலவச பஸ் எண்ணிக்கை அதிகரிக்கிறது; தமிழக அரசு முடிவு

மகளிர் இலவச பஸ் எண்ணிக்கை அதிகரிக்கிறது; தமிழக அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.தலைநகர் சென்னையில் நாள்தோறும் 3232 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 1500 பஸ்கள் மகளிர் கட்டணமில்லா பஸ்களாக இயங்குகின்றன. இந்த வகை பஸ்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதோடு,மகளிர் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளதால் கூடுதலாக 174 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.பயணிகள் எண்ணிக்கை, வருவாய் குறைவாக இருக்கும் வழித்தடங்களில் உள்ள பஸ்கள், கட்டணமில்லா பஸ்களாக மாற்றப்படுகின்றன. இந்த பஸ்கள், கூட்ட நெரிசல் மிக்க வழித் தடங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anantharaman Srinivasan
பிப் 17, 2025 23:11

ஆண்கள் போடும் அதே ஓட்டைத்தான் பெண்களும் போடுகிறார்கள். பெண்களுக்கு மட்டும் ஏன் ஓசி பஸ்.? ஆண்களே வரும் தேர்தலில் திமுக க்கு ஓட்டு போடாதீர்கள்.


தமிழன்
பிப் 17, 2025 22:19

அடுத்த வருடம் தேர்தல் வரும் வரை மக்களுக்கு இனி பொற்காலமே இனிதான் கேடுகெட்ட ஈ...ப்பிறவிகள் அரசியல்வாதிகளின் கண்களில் மக்களின் துயரம் தெரியத் தொடங்கும் ஆனால் தேர்தல் முடிந்து விட்டால் அடுத்த 4 ஆண்டுகள் ஏன்டா இவனுகளை தேர்ந்தெடுத்தோம் என உயிரெடுக்கும் அளவிற்கு மக்களை கொன்று புதைத்து விடுவானுகள்


KRISHNAN R
பிப் 17, 2025 21:08

ரீபொக் ஷூ, கூலிங் கிளாஸ்..தீவாளி.க்கு ரெடி


Mohammad ali
பிப் 17, 2025 20:51

யாரு காசு திருட்டு பாவிகளா


Barakat Ali
பிப் 17, 2025 20:03

எதுக்கு ???? ஓசி டிக்கெட்டு ன்னு கிண்டல் பண்ணுறதுக்கா ????


Ramesh Sargam
பிப் 17, 2025 19:52

இப்படி இலவசங்களை கொடுத்துதான் திமுக அடுத்த தேர்தலிலும் வெற்றி பெரும். நேர்மையாக, ஊழல் இல்லாத அரசாங்கம் நடத்தி அவர்களால் வெற்றிபெறவே முடியாது. இலவச பயணம் செய்யும் தமிழக பெண்களை கடுமையாக கண்டிக்கிறேன். உங்களுக்கு சூடு, சொரணை, வெட்கம், மானம், மரியாதை எதுவுமே இல்லையா...?


V வைகுண்டேஸ்வரன்
பிப் 17, 2025 22:24

நீங்கள் வசதியானவராக இருக்கலாம். அதுக்காக, ஏழைப் பெண்களை இப்படி அவமரியாதையாக எழுதாதீர்கள். எத்தனையோ லட்சம் பெண்கள், ஒன்றிரண்டு வீடுகளில் "maid" வேலை செய்தாவர்கள், இலவச பஸ் வந்ததால் இப்போது 5, 6 வீடுகளில் வேலை செய்கிறார்கள். எத்தனை லட்சம் சேல்ஸ்கேள் கள், இலவச பஸ் இருப்பதால், பணம் மிச்சம் பிடிக்கிறார்கள் தெரியுமா? கீரை விற்பவர்கள் முதல் மீன்காரம்மா வரை வியாபாரத்தை அதிகரிக்க முடிகிறது. டியுஷன் எடுக்கும் ஓய்வு பெற்ற டீச்சர்கள், பாட்டு டீச்சர்கள்எல்லோருக்கும் இலவச பஸ் ஒரு வரப்பிரசாதம். மாணவிகள், தங்களின் ஆசிரியர்கள் நடத்தும் டியுஷன் சென்டர்களுக்கு இலவசமாக டியுஷன் போக முடிகிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, "இலவச பயணம் செய்யும் தமிழக பெண்களை கடுமையாக கண்டிக்காதீர்கள். அவர்கள் பாவம்.


Mohammad ali
பிப் 18, 2025 14:24

உன் முட்டுக்கு அளவே இல்லாமப்போச்சு.


Rajarajan
பிப் 17, 2025 19:15

போற போக்குல, உங்க சுயநலத்துக்கு, தமிழக அரசின் கஜானாவை தூர் வாரிடனும்னு முடிவு பண்ணிடீங்க. சிலரது கஷ்டம், சிலருக்கு லாபம். சிலரது துன்பம், சிலருக்கு இன்பம். யார் யாரை கேள்வி கேட்க முடியும்?? எல்லாம் எங்க விதி.


Amar Akbar Antony
பிப் 17, 2025 18:12

சென்னையில் மட்டும் எத்துணை இளஞ்ர்கள் தளபதியின் த வெ க விற்கு ஆதரவு என்பதை ஆராய்ந்து கவனிக்க தி மு க வினர்க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் ல். அரசின் சிற்ப்புத்துறை கொடுத்த தகவல்கள் ஆளும் கட்சிக்கு பேரிடியாக இருந்தது என்பதும் கவனிக்கவேண்டும் அடுத்த தேர்தலில் தளபதி விஜய்க்கு சென்னையில் மட்டும் பாதிக்குமேல் சட்டசபைக்கு த வெ க ஆட்கள் இருப்பர் என்பதும் கணிப்பு. சும்மா இருக்கமுடியுமா? இனி அண்ணாமலை வேரு இரண்டாயிரம் உரிமை தொகை வழங்குவோம் என்கிறார் மகளிர் படு கொண்டாட்டம் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை