உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட சிலர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலை மாதம் நிபந்தனை ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p4rnyjzh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகவில்லை. இது குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார்.இந்நிலையில், சென்னையில் போலீசார் அவரை கைது செய்து தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பூமிதேவ்
டிச 18, 2024 10:48

போட்டோவில் கஞ்சா அடிச்சமாதிரித்தான் இருக்காரு.


R.MURALIKRISHNAN
டிச 17, 2024 19:44

செந்தில் பாலாஜிக்கு மந்திரி பதவி. நல்ல நீதி


M Ramachandran
டிச 17, 2024 19:32

திருட்டு கும்பல் எதைய்ய செய்தாலும் ஆமா சாமி போ டும் டும் என்று பூம் நாடுகளாக தமிழ்நாட்டு மாக்கள் இருக்கையில் காட்டில் மழை.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2024 19:08

உள்ள வெச்சு ஜோலியையே முடிக்கிற திட்டம் இருக்குமோ ????


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 17, 2024 18:50

ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்திருந்தார். அப்போதும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, தேனி போலீஸார் சென்னைக்குச் சென்று, சவுக்கு சங்கரை கைது செய்தனர்:::::::::: அப்புறம் கைது செய்யா மல் ஆரத்தி எடுத்து போட்டு வைபவர்களோ


MADHAVAN
டிச 17, 2024 18:50

இவருக்கு மீண்டும் மாவுக்காட்டு போடுங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2024 18:49

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார் ........


கூமூட்டை
டிச 17, 2024 18:35

சூப்பர் இவர் தொழில் பாதிப்பு இது தான் கூமூட்டை திராவிட முன்னேற்றக் கழகம் மாடல் வாழ்க வளமுடன் அகண்ட ஊழல் வாதி தக்காளி


பாலா
டிச 17, 2024 18:18

வாழ்த்துகள் செய்யும் ஊடக ராவுடித்தனத்துக்கு கிடைத்த பரிசு.


Raja Vardhini
டிச 17, 2024 18:08

விநாச காலே விபரீத புத்தி என்பார்கள் ... சங்கர் அவர்கள் மீண்டு வந்து மறுபடியும் தமிழகத்திற்கு பாடு படுவார்.


புதிய வீடியோ