உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சந்திரனுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்

சந்திரனுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்

பெய்ஜிங்: விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட சீனா பின்தங்கியுள்ளது. எனவே, அந்த துறையில் அமெரிக்கா அளவுக்கு முன்னேற மிகவும் ஆர்வமாக உள்ளது. அதற்கு முன்னோட்டமாக சந்திரனில் ஆய்வு மேற் கொள்வதில் தீவிரமாக உள்ளது. முதல்கட்டமாக சீனா தனக்கென்று விண்வெளியில் தனியாக ஒரு ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.அதற்கான பொருட்கள் மற்றும் கருவிகளை ராக்கெட் மூலம் கொண்டு செல்லும் பணி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. வருகிற 2013-ம் ஆண்டில் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 2020ம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வு நடத்த சீனா முடிவு செய்துள்ளது. இந்த ஆய்விற்காக சீன அரசு நிதி ஒதுக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை