உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலில் மாயமான 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

இஸ்ரேலில் மாயமான 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: இஸ்ரேலில் காணாமால் போன இந்திய கட்டுமான தொழிலாளர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதகரம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடங்கிய பிறகு, பாலஸ்தீன கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனால், ஏற்படும் கட்டுமான தொழிலாளர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்படி வந்த இந்திய தொழிலாளர்களில் 10 பேர் திடீரென மாயமாகினர். இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மேற்கு கரை பகுதியில் இருந்து 10 இந்தியர்கள் இஸ்ரேல் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், ' வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அல் ஜாயேம் பகுதியின் மேற்கு கரை கிராமத்திற்கு இந்தியர்களை பாலஸ்தீனர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு, அவர்களின் பாஸ்போர்ட்டை பறித்து, அதன்மூலம், இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்,' எனக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natarajan Ramanathan
மார் 07, 2025 12:26

இஸ்ரேலுக்கு வேலைக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டை அந்த நாட்டு அதிகாரிகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பனிக்காலம் முடியும்வரை வைத்திருந்து பின்னர் திருப்பி தரலாம்.


R Dhasarathan
மார் 07, 2025 11:44

இன்னும் கொஞ்ச நாளில் இங்கு வேலைக்கு வெளிநாட்டில் இருந்து ஆட்களை அழைத்து வரவேண்டிய நிலை வந்து விடும்


अपावी
மார் 07, 2025 10:55

அங்கேதான் பாலும் தேனும் ஆறா ஓடுதே...ஏன் மீட்டீங்க?


புதிய வீடியோ