உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தமிழ் மண்ணில் இருக்கும் உணர்வு: அமெரிக்க தமிழர்கள் மத்தியில் ஸ்டாலின் நெகிழ்ச்சி

தமிழ் மண்ணில் இருக்கும் உணர்வு: அமெரிக்க தமிழர்கள் மத்தியில் ஸ்டாலின் நெகிழ்ச்சி

வாஷிங்டன்: 'அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வை தருகிறது' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரமாண்டமாக நடந்த தமிழர் கலை நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வை தருகிறது. சிறப்பான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ததற்கு நன்றி. அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.

பாசத்தை ஊட்டிய தாய்

தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது. தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன்பிறப்புகள். நம் எல்லோருக்கும் பாசத்தை ஊட்டிய தாய் தமிழ்த்தாய் தான். தமிழை தமிழே என்று அழைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

வரலாற்றைக் கண்டேன்!

சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ' இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு! சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழகத்தின் முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளைச் சொல்லி அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன்' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

C.SRIRAM
செப் 09, 2024 18:02

அதென்ன தமிழ் மண் தமிழையே ஒழுங்காக பேசமுடியுமா துண்டு சீட்டு இல்லாமல் ... என்பது சந்தேகம். வேண்டுமென்றால் தெலுகு மண் என்று வேண்டுமானால் சொல்லலாம் ?.


C.SRIRAM
செப் 09, 2024 18:02

அதென்ன தமிழ் மண் தமிழையே ஒழுங்காக பேசமுடியுமா துண்டு சீட்டு இல்லாமல் ... என்பது சந்தேகம். வேண்டுமென்றால் தெலுகு மண் என்று வேண்டுமானால் சொல்லலாம் ?.


J.V. Iyer
செப் 08, 2024 17:26

அங்கே இருநூறு ரூவா கொடுத்தா வரமாட்டாய்ங்களே? கூட்டம் சேர்க்க இருநூறு டாலர் கொடுத்திருப்பாரோ? இல்ல எல்லோரும் பினாமிகளோ?


saral
செப் 08, 2024 23:54

Exactly. Now we could see the crowd which is a group of non meritorious waste guys whom might have got benefited by these rotten group or could be benamis as mentioned by you. To invest the bribed money here in US dollars…


Matt P
செப் 10, 2024 04:21

வேற்று மண்ணில் வாழ்வதால் மக்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு வீட்டை விட்டு வெளியே வந்து நண் பர்களையெல்லாம் ஓன்று கூடி பார்ப்பதற்கும். எப்போதாவது தமிழ்ச்சங்களால் தீவாளி ,தமிழ் ஆண்டு பிறப்பு .பொங்கல் கொண்டாடப்படும்போது தான் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும். இப்போது ஸ்தாலினுக்காக ஒரு விழா . சிக்காகோ என்ற பெரிய நகரில் இப்படி ஒரு கூட்டத்தை சேர்ப்பது கடினமல்ல.


Thiruvengadam Ponnurangam
செப் 08, 2024 16:39

அய்யா சீக்கிரம் திரும்பி வாங்க, வரதுக்குள்ள ஒரு வலி ஆகிடுவாங்க போல நீங்க நம்பி விட்டுவிட்டு போன ஆட்சியை.. பள்ளி குழந்தைகள் பாவம்.. சரி, நீங்க மட்டும் என்ன சொல்வீங்க, பல கொடுமைக்கு இன்னும் தீர்வு இல்லாம பல பிரச்சனை இருக்க இது வேறயா என நீங்கள் நினைப்பது புரிகிறது.


Kumar Kumzi
செப் 08, 2024 14:28

கர்த்தரின் சீடர் விடியலூ என்னய்யா கோலம் இது ஹீஹீஹீ உன் மதத்துக்காரனுங்க கோவிச்சுக்க மாட்டானுங்களா


ஆரூர் ரங்
செப் 08, 2024 13:30

பக்கத்துல நிறைய மனவாடு இருக்காங்க போய்பா பாருங்க.


Matt P
செப் 08, 2024 13:15

அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது....அமெரிக்கா மக்களின் முகத்தையே பார்த்து கொண்டிருக்கணும் என்றால் விசா கிடைக்கணும் ..அப்புறம் நிரந்தரமாக இருக்க வேண்டியது தான். ..தமிழக மக்களை என்னால் கொஞ்ச நாள் பிரிந்து இருப்பது கடினமா இருக்கிறது. எப்போது திருப்பி தமிழ் நாட்டு மண்ணை தொடுவேன் என்றால் உங்கள் மதிப்பு உயரலாம். ..ஆமா தொப்பி புதுசா தெரியுது. சிக்காகோ ஏரிக்கரையில் வாங்கினதா இருக்குமோ.


Lion Drsekar
செப் 08, 2024 12:57

அங்கு என்றதும் இந்தியர்கள் என்று தவறுதலாக பேசியதை உணர்ந்த அதிகாரிகள் அழகாக உண்மையை வெளிபப்டும் வகையில் தமிழர்கள், தமிழ்மண் என்று மாற்றியது பாராட்டுக்கள், பாமர மக்கள் வெளிநாடுகளுக் சென்றால் அங்கு எல்லோரும் அடையாளம் காணப்படுவது அந்த நாட்டினர்தான் , இந்த நாட்டைச் ஆர்ந்தவர் என்பது வழக்கம் , அதையும் மாற்றி அமைத்து , சீர்திருத்தம் செய்து நிலைநாட்டியது நாம் எல்லோருக்கும் பெருமை சேர்ப்பதாகும், வந்தே மாதரம்


Kumar Kumzi
செப் 08, 2024 14:19

பெருசுக்கு கர்த்தரின் சீடரின் மேல் மத பற்று ரொம்ப அதிகம் போல ஹீஹீஹீ


Kumar Kumzi
செப் 08, 2024 12:26

ஹாஹாஹா கர்த்தரின்சீடர் ஹிந்துமத ஜென்ம விரோதி இந்துக்களின் பாரம்பரிய உடையில் நிக்குறான்யா ஹீஹீஹீ


Sridhar
செப் 08, 2024 11:48

அமெரிக்காவுல நெகிழ்ச்சி, சரி அப்படியே ஒன்கோல்ல போயி நின்னென்னா என்ன உணர்வு வரும்? தமிழ் தமிழ் ங்கறயே, தமிழ பத்தி என்ன தெரியும். திருக்குறளையாவது படிச்சிருப்பாயா?


முக்கிய வீடியோ