உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட் ரத்து

ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட் ரத்து

டாக்கா:வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு நிர்வாகம் ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.வங்கதேசத்தில் இடஒதுக்கீ்ட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷே க் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்களை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்தது. அதுமட்டுமின்றி அவரது அமைச்சரவையில் இருந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kanns
ஆக 26, 2024 08:59

Settle Hindus in Reclaimed East Bengal Coast


DEENATHAYALU
ஆக 23, 2024 11:21

இது தவறான செயல் .............


VENKATASUBRAMANIAN
ஆக 23, 2024 08:24

இவர் பாகிஸ்தானின் உத்தரவு படி வேலை செய்கிறார். நாட்டின் மீது கவலை இல்லை. இவரை நம்பி போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் நிலைமை மிக மோசம்


GSR
ஆக 23, 2024 07:31

கவனித்து கொண்டு தான் வருகிறேன். ஒரு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்று பத்து நாட்களில் செய்ய கூடிய எதையும் யூனுஸ் அரசு செய்யவில்லை. ஹசினா பதவி விலகுவதற்கு முன்பு இருந்தே அரசியல்வாதி போல் தான் பேசுகிறார். இப்பொழுதும் பழி வாங்கும் அரசியல் தவிர வேறு எதையும் இங்கு முன்னெடுக்கவில்லை. இந்த லட்சணத்தில் இங்கு உள்ள சிலர் இந்த மாற்றத்தை முன்னுதாரணமாக பார்க்க விரும்புகிறார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை