உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்: ஆஸி., எம்.பி., புகார்

போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்: ஆஸி., எம்.பி., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மெல்போர்ன்: இரவு நேரத்தில் வெளியே சென்ற போது போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன் என ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து எம்.பி., ஒருவர் புகார் தெரிவித்து உள்ளார். கடந்த ஏப்.,28 ல் அளித்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.பிரிட்டானி லவுகா(37) என்ற எம்.பி., கூறியதாவது: இரவு நேரத்தில் வெளியே சென்ற போது போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன். மருத்துவமனையில் நடந்த சோதனையில் எனது உடலில் போதை மருந்து இருந்தது உறுதியானது. ஆனால், நான் அதனை எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற நிகழ்வு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். பலருக்கு இது போல் நடந்துள்ளதாக புகார் வருகிறது என்றார்.இது தொடர்பாக குயின்ஸ்லாந்து போலீஸ் கூறுகையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். வேறு யாருக்கும் இதுபோன்று நடந்ததாக தற்போது வரை புகார் வரவில்லை. யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் போலீசாரை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மே 05, 2024 20:40

ஆஸ்திரேலியாவில் கூட பாஜகவினர் இருக்கின்றார்களா?


kulandai kannan
மே 05, 2024 18:33

பச்ச புள்ள சார் இந்த எம்.பி


Godfather_Senior
மே 05, 2024 18:18

அட, சர்வாதிகாரி தொடர்பும் புகழும் நாடு கடந்து தேசம் தேசமா பரவிடிச்சே தமிழனென்று சொல்லடா, தலைகுனிந்து நில்லடா :=


Barakat Ali
மே 05, 2024 17:00

உங்க நாட்டுக்கு அதை அனுப்பி வெக்க ஏற்பாடு பண்ணுவதே எங்க சர்வாதிகாரியின் திராவிட மாடல்


Anonymous
மே 05, 2024 14:10

அய்யா ஜாபர் சாதிக் கடத்தின போதை பொருளான்னு ஒரு தடவ சரி பாத்துக்குங்க, ஏன்ன இவரு போதைப்பொருளை கடத்துன நாட்டு லிஸ்ட்ல ஆஸ்திரேலியாவும் உண்டு தமிழன் என்று சொல்ல, தலை நிமிர்ந்து நில்லு னு எவனாவது சொல்லிட்டு வரட்டும்


J.V. Iyer
மே 05, 2024 12:56

ம்ம்ம் தமிழகத்திற்கு ஏதோ இதில் தொடர்பு இருக்கிறது என்று நம்பலாமா?


Pandi Muni
மே 05, 2024 19:52

ஆமா ஆமா இல்லாமயா பின்ன


மேலும் செய்திகள்