உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹசீனா தஞ்சம் : இது இரண்டாம் முறை- டில்லி ரகசிய இடத்தில் தோவால் சந்திப்பு

ஹசீனா தஞ்சம் : இது இரண்டாம் முறை- டில்லி ரகசிய இடத்தில் தோவால் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: இந்தியா தப்பி வந்து,ரகசிய இடத்தில் தங்கியுள்ள ஷேக்ஹசீனாவை டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்லி., முற்றுகை

வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா 76, இந்தியா தப்பி வந்துள்ளார். இதனிடையே வங்கதேச பார்லிமென்டை மாணவர்கள் , போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.முன்னதாக பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், போராட்டக்காரர்கள், அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மாணவர்கள், போராட்டக்காரர்களால் வங்கத தேச தலைநகர் டாக்காவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில் இந்தியா தப்பி வந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டில்லியில் லஜ்பத் நகரில் ரகசிய இடத்தில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது இரண்டாம் முறை

இதே போன்று 49 ஆண்டுகளுக்கு முன் ஷேக் ஹசீனா, தன் குடும்பத்துடன் இந்தியாவிற்கு தஞ்சமடைய வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஹசீனாவின் தந்தையும்,வங்கதேச நாட்டை நிறுவியவரும் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான், உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டனர்.இதையடுத்து ஹசீனா தன் கணவர் வாஸ் மையாக், தன் குழந்தைகள், மற்றும் உடன் பிறந்த சகோதரி ஷேக் ரஹானா ஆகியோருடன் இந்தியாவிற்கு தப்பி வந்தார். டில்லி பண்டாரா சாலையில் உள்ள ரகசிய இல்லத்தில் பல ஆண்டுகள் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹசீனாவுடன் அஜித் தோவல் சந்திப்பு

இதற்கிடையே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தங்கி உள்ள ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

mayavan
ஆக 06, 2024 09:07

அன்று இலங்கை இப்பொழுது வங்கதேசம் நம்மை சுற்றியுள்ள எதிரிகளை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்


paulsamy lakshmana pandarapuram sadaiyandi
ஆக 06, 2024 10:08

உண்மைஜி


mayavan
ஆக 06, 2024 09:03

அன்று இலங்கை intru


Ramesh Sargam
ஆக 06, 2024 06:11

Why Haseena came to India? Why she did not seek asylum in Pakistan or in any other Islamic nation? Because she knows that India, though a majority Hindu nation is always safe to seek asylum?


Anantharaman Srinivasan
ஆக 05, 2024 21:44

இந்தியா தப்பி வந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாக்கு இந்திய அரசு அடைக்கலம் கொடுப்பது எதற்காக..?


Ramesh Sargam
ஆக 05, 2024 19:41

ஹசீனாவுக்கு ரகசிய தஞ்சம் இந்தியா அளித்திருப்பதால், அந்நாட்டு ராணுவம் இந்தியாவை எதிரியாக பார்க்குமா? போர் மூல வாய்ப்பு இருக்குதா? அல்லது இந்தியாவுக்கு அந்நாட்டு ராணுவம் வெறும் எச்சரிக்கை விடுக்குமா, ஹசீனாவை திரும்ப அனுப்ப சொல்லி?


Naga Subramanian
ஆக 06, 2024 08:25

தங்களது தமிழக பிரதமரிடம் கூறுங்கள். தங்களது ஆசையை நிறைவேற்றுவார்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 05, 2024 19:41

இந்தியா இஸ்லாமிய நாடானால் என்ன ஆகும் ????


Johny
ஆக 06, 2024 11:19

அனைத்து ஆண்களும் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் சகோதரிகளுக்கு சொத்தில் பங்கு தரத் தேவையில்லை ஹெல்மெட் அணியாமல் தொப்பி மட்டும் வைத்து செல்லலாம்


RAMAKRISHNAN NATESAN
ஆக 05, 2024 19:39

இந்தியாவில் இருக்கும் கள்ளக்குடியேறி வங்கதேசத்தவர் திருப்பியனுப்பப் பட வேண்டும் என்று குரல்கள் எழுந்த பொழுது ஹிந்துக்கள் மட்டும் இங்கே வங்கதேசத்தில் பாதுகாப்புடன் இருந்துவிட முடியுமா என்று கேட்டவர் .....


SUBBU,MADURAI
ஆக 05, 2024 19:35

Sad day for India. Every country surrounding India is troubled and none of them is a democracy anymore. Tough times ahead


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி