உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மொரீஷியசில் மருத்துவமனை: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

மொரீஷியசில் மருத்துவமனை: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போர்ட் லுாயிஸ்: மொரீஷியசில், நம் நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட நவீன மருத்துவமனையை, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார். ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள தீவு நாடான மொரீஷியசுக்கு, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். அந்நாட்டின் பிரதமர் பிரவீன் ஜெகன்னாத் அவரை வரவேற்றார்.அதன்பின் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கும் சாஹர் திட்டத்தை முன்னெடுத்து செல்வது பற்றியும், ஆப்ரிக்க நாடுகளின் வளர்ச்சியை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில், மொரீஷியசின் கிராண்ட் பைஸ் என்ற பகுதியில் நம் நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''நவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதில், எங்கள் நாட்டின் பங்களிப்பும் இருப்பதை எண்ணி, பெருமைக்கொள்கிறேன். இது, இருநாடுகளுக்கு இடையிலான நட்பின் புதிய வெளிப்பாடு,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Aroul
ஜூலை 18, 2024 09:52

எப்படியும் சாராயம் குடித்து சாகப்போரங்க எதுக்கு எய்ம்ஸ். குடிச்சி சாகரதுதான் பாக்கி 10 லட்சம் ரெடியா இருக்கு.


பச்சையப்பன் கோபால்புரம்
ஜூலை 18, 2024 08:59

ஆமாமா! மதுரையிலே எய்ம்ச்சை துவக்க வக்கில்லேஒண்ணுமே நடக்கல! போயிட்டாங்க மொரிச்லே ஆசுபத்ரி திறக்கிறதுக்கு!!


hari
ஜூலை 18, 2024 11:40

கள்ள சாராய அரசுக்கு எதுக்குலே AIIMS?


Kumar Kumzi
ஜூலை 18, 2024 11:59

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போட்ட 40/40 விடியல் கிட்ட கேளு


Karthi
ஜூலை 18, 2024 07:27

எஸ் ப்ரோஸெட்


kannan
ஜூலை 18, 2024 07:18

இந்தியாவின் நட்பை பலப்படுத்த நல்லதொரு நிகழ்வு.


Sriraman Ts
ஜூலை 18, 2024 06:47

It is a great honour to our country.


Sriraman Ts
ஜூலை 18, 2024 06:46

பெருமிதம் அடையக்கூடிய விஷயம்


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:01

சிறப்பு.. அப்படியே அந்த வணிகர், பொருளாதார பயங்கரவாதி காலையில் ஆரம்பித்து மாலையில் மூடிய நிறுவனம் பற்றி தகவலறிந்து திரும்பவும் உள்ளே தூக்கி வைக்கவேண்டும். சமீபமாக ஓவராக துள்ளித்திரிகிறார்..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை