உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமலா ஹாரிஸ் கருப்பினத்தவராகவே மாறிவிட்டார்: டிரம்ப் ஆதங்கம்

கமலா ஹாரிஸ் கருப்பினத்தவராகவே மாறிவிட்டார்: டிரம்ப் ஆதங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். . இந்நிலையில் சிகாகோ நகரில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்க மாநாட்டில் பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், கமலா ஹாரிஸ் மீது இனவெறி கருத்தினை தெரிவித்துள்ளார். டிரம்ப் மேலும் கூறியதாவது, ‛கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை உடையவர். இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். ஆனால் தற்போது அவர் கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். அதனால் கமலா ஹாரிஸ் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா என்று தெரியவில்லை. ஆனால் நான் எல்லோரையும் மதிக்கிறேன். கமலா ஹாரிஸ் வெளிப்படைதன்மை உடையவராக இல்லை. இந்தியராக இருந்த அவர் திடீரென்று கருப்பினத்தவராக மாறிவிட்டார். இந்த நாட்டின் கருப்பின மக்களை நேசிக்கிறேன். ஆப்பிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான் தான்‛ இவ்வாறு டிரம்ப் பேசினார்.கமலா ஹாரிஸ் மீதான டிரம்பின் இந்த குற்றச்சாட்டிற்கு அமெரிக்காவில் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு இடையே டிரம்ப் கமலா ஹாரிஸின் புகைப்படம் ஒன்றை பல வருடங்களுக்கு முன் இணையத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப், ‛ நீங்கள் அனுப்பிய புகைப்படத்திற்கு நன்றி. உங்கள் அரவணைப்பு, இந்திய மக்கள் மீதான அன்பு பாராட்டுக்குரியது'. இவ்வாறு டிரம்ப் அதில் பதிவிட்டிருந்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 13:40

கமலா செய்தது குற்றமல்ல ... ஆனால் சந்தர்ப்பவாதம் ..... கருணாநிதி விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டால் நானும் ஒரு விவசாயிதான் என்பார் எதை உழுது, எதை விதைத்தார் என்று பலர் வேடிக்கையாகக் கேட்பார்கள் .... ஒரு தொழிலாளர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டால் நானும் ஒரு தொழிலாளி என்பார் ...


Manon
ஆக 03, 2024 12:46

She became American. These Indian origin American never support India in any forum. It is meaningless to expect any favour from these types of people. Let her at least honest and sincere to America and her voters.


Sridhar
ஆக 03, 2024 12:40

கமலா செய்ததில் தவறேதும் இல்லையே? அவருடைய அம்மா இந்தியர் என்றால் அப்பா ஜமைக்காவை சேர்ந்தவர். ஆகவே அவர் இந்தியர் போலவும் கறுப்பர் போலவும் தன்னை காட்டிக்கொள்வதில் என்ன தவறு? இந்திய அரசியலில் நிறைய தலைவர்கள் இடத்துக்கு தகுந்தவாறு வேடம் போடுவதில்லையா? ஏன் பிரதமர் மோடியே தமிழகத்துக்கு வரும்போது வேட்டி அணிந்துவருகிறாரே? ராவுல் கண்டி இடத்துக்கு ஏத்தவாறு பூணூலும் போடுவார் குல்லாவும் அணிவார். இதெல்லாம் சகஜம்தானே? டிரம்ப் இதை பிரச்னையாக்காமல் கமலாவின் பேச்சுக்களை மட்டும் ஒரு வீடியோ தொகுப்பு எடுத்து போட்டால் போதுமே, மொத்த மேட்டரும் முடிஞ்சிடுமே? ராவுல், கமலா மற்றும் நம்ம ஊரு கமலஹாசன் இவர்களின் பேச்சில் ஒரு வித ஒற்றுமை காண முடிகிறதே பேரும் பேச்சும் ஒரேபோல இருக்கறதுனால, உடனே நம்ம ஆளு பெருமைப்பட்டு ட்விட்டர்ல வாழ்த்து சொல்ல முயற்சிப்பாரு பாருங்க


Sampath Kumar
ஆக 03, 2024 12:09

அய்யா ட்ரம்ப் உங்களுக்கு ஒரு விஷயம் இந்த ஆத்தா இந்தியன் தான் அனால் இவரு சார்ந்த சாதி உயர்சாதி என்று எங்க ஊரில் சொல்லப்படும் பிரிவை சேர்ந்தவாறு அவனுக மாதிரி சந்தற்பவியாதிகளி உலகில் வேறு ஏங்கும் பார்க்க முடையது அதைத்தான் இப்போ நீக்க பார்க்கின்றிர்கள் கற்புதான் என்னக்கு புடிச்ச கலர் என்று பாடுவார் ஆடுவர் அதுதான் அந்த உயர் சாதிக்கும்பலின் நிலை பாடு


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 13:36

சமச்சீரு சம்பத்து .... சாதிகள் மனிதர்களால் உண்டாக்கப்பட்டவை ... செய்யும் தொழிலால் இனம் வேறுபடுது .... பிறப்பால் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை ... திராவிடத்தை வைத்து பிழைக்கும் உன் கூட்டத்துக்கு, நாரசொலி படிக்கும் உன் கூட்டத்துக்கு இது புரியவே புரியாது ...


subramanian
ஆக 03, 2024 11:14

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றாலும் பாரதத்தை ஒன்றும் பெரியதாக கொண்டாட மாட்டார்.


subramanian
ஆக 03, 2024 11:11

கமலா ஹாரிஸ், வெற்றி பெற்றால் தமிழனாக , பாரத குடிமகனாக பெருமைப்படுவேன்.


Kannan R
ஆக 03, 2024 11:08

நாம் கமலா ஹாரிஸ் ஒரு வேட்பாளராக தேrந்து எடுக்கப்பட்டதிற்கு பெருமைப்படவேண்டும் ஒரு தமிழ்நாட்டுப்பெண்மணி இந்த அளவிற்கு உயரத்திர்கு ஹாட்ஸஆஃ


S. Gopalakrishnan
ஆக 03, 2024 10:57

இந்தம்மாவைக் கண்டு நாம் உணர்ச்சி வசப்படத் தேவையில்லை. இவர் இந்தியாவுடன் உறவு பாராட்டுவது இல்லை.


subramanian
ஆக 03, 2024 11:09

பெரிய விஷயத்தை, தெளிவாக , சுருக்கமாக சொல்லி விட்டீர்கள் சபாஷ். ஆனால் இங்கு இருப்பவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.


R k Ramanathan
ஆக 03, 2024 11:19

You are very much correct She has never been supporting to Indian cause Now for seeking votes pamphleting Indian USA voters Let us not be supporting her candidacy


DARMHAR/ D.M.Reddy
ஆக 03, 2024 10:15

ட்ரம்ப் ரிபப்லிக் கட்சியை சேர்ந்தவர் ஆதலால் ஜன நாயக கட்சியை சார்ந்த கமலா ஹாரிஸ் மீது எதாவது குற்றம் சொல்லாமல் இருக்க மாட்டார். குள்ள நரி ஒன்று தனக்கு மேலே பந்தலில் உள்ள திராட்சை குலையை அடைய எம்பி எம்பி குதித்தும் அதை அடைய முடியவில்லை என்ற பிறகு சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லிக்கொண்டு வாலை சுருட்டிக்கொண்டு என்று ஓடி விட்டதாம் . ட் ரம்புக்கு இந்த கதை தெரியாதோ என்னவோ ஆண்டவனுக்கே வெளிச்சம்


veeramani
ஆக 03, 2024 09:57

அமெரிக்க தினர் வேட்பாளர் டிரம்ப் கருத்திற்கு கடும் எதிர்ப்பை நான் தெரிவித்த்துக்கொள்கிறேன் இந்திய கருப்பு இனத்தினர் மீது இவருக்கு மிக அதீத வெறுப்பு . மனதில் இருப்பதுதான் வாய்வார்த்தையாக வரும் டிரம்ப் போன்றவர்கள் முதலில் அமெரிக்க பூர்வ குடிகளான சிவப்பு இந்தியர்களை மதிக்கிறார்களா ???? இல்லவே இல்லை . அவர்கள் சிகப்பு தோல் உடையவர்கள் என்ற ஆணவம். ஆயினும் சிவப்பு இந்திய பூர்வ குடிகளை ஏன் வெறுக்கிறார்கள். சிவப்பு இந்தியர்களுக்கு என்ன உயர் பதவி கொடுக்கிறார்கள். வெட்க கேடு திருமதி கமலா ஹாரிஸ் அதிபராக வெற்றிபெற இந்தியர்களின் வாழ்த்துகள் !


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை