உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தமிழக மீனவர்கள் விடுவிப்பு

தமிழக மீனவர்கள் விடுவிப்பு

கொழும்பு,:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள் நேற்று விமானம் வாயிலாக திருப்பி அனுப்பப்பட்டனர்.தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் இடையேயான பாக் ஜலசந்தி மீன் வளம் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் தென் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிக்கின்றனர். அவர்களில் சிலர் அவ்வப்போது எல்லை தாண்டி இலங்கை பகுதிக்கு சென்று மீன் பிடிப்பதாக கைது செய்யப்படுகின்றனர். ஆக., 1ல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படை கைப்பற்ற முயன்றது. அப்போது மீன்பிடி படகு மீது கடற்படை படகு மோதியதில், ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் பலியானார். ஒருவர் மாயமானார். இது இந்திய - இலங்கை இருதரப்பு உறவில் சர்ச்சையானது. இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 15, 2024 20:25

ரஜினி,செந்தில் காமெடி மாதிரி, மாப்பிள்ளை அவர்தாங்க, ஆனால் அவர் போட்டிருக்கும் உடை எண்ணுதுங்க. அதுபோல மீட்டது மத்திய அரசு, ஆனால் ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பேசிக்கொள்வது திமுகங்க...


Ramesh Sargam
ஆக 15, 2024 12:12

முதல்வர் எடுத்த நடவடிக்கையால் மீனவர்கள் விடுவிப்பு என்று திமுக அல்லக்கைகள் இப்பொழுது பொய் பேசி மக்களை ஏமாற்றும் பாருங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை