உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முன்னாள் பிரதமர் பேகம் கலிதாஜியாவை விடுவிக்க உத்தரவு

முன்னாள் பிரதமர் பேகம் கலிதாஜியாவை விடுவிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் பேகம் கலிதாஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா,76 , நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.இந்நிலையில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவை விடுதலை செய்து ஹசீனாவிற்கு மாற்றாக கலிதாவை அரசு அமைக்க அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வங்கதேச தேசியவாத கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான பேகம் கலிதா ஜியா பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஆக 06, 2024 11:15

கலீதாஜியா மீண்டும் ஊழல் செய்யாமல் இருக்க வேண்டும்.


subramanian
ஆக 06, 2024 11:12

இயல்பு நிலை திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


Venkatasubramanian krishnamurthy
ஆக 06, 2024 09:09

பூனைக்குட்டி வெளியே வந்தது. ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இடஒதுக்கீட்டை வைத்து போராட்டத்தை அரசியல் ஆதாயத்திற்காக தூண்டிவிட்ட எதிர்க்கட்சிகளின் சதி என்பது இப்போது தெளிவாகிறது.


Shankar
ஆக 05, 2024 23:30

இனி பாகிஸ்தான் மற்றும் இலங்கை நிலைதான் பங்களாதேஷுக்கும்.


மேலும் செய்திகள்