UPDATED : ஜூலை 01, 2024 10:45 AM | ADDED : ஜூலை 01, 2024 06:55 AM
கொழும்பு: இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான ரா.சம்பந்தன் இன்று (ஜூலை 01) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசு கட்சி போன்றவற்றின் தலைவராக இருந்தார்இவர் 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகள் எப்போதும் போற்றப்படும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்ற வாழ்க்கையை அவர் இடைவிடாமல் பின்பற்றினார். இவ்வாறு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இ.பி.எஸ்., அதிமுக பொதுச்செயலாளர்
இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும், மறுக்க முடியாதவருமாகிய ஈழ தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன,
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (30.6.2024) இரவு 11 மணியளவில் தனது 91வது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு, ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.