உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விலைவாசி உயர்வை கண்டித்து நைஜீரியாவில் போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து நைஜீரியாவில் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுஜா: நைஜீரியாவில் போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்களை ஒடுக்க, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில, கடந்த ஆண்டு அதிபராக பொறுப்பேற்ற போலா டினுபு, எரிபொருள் மானியத்தை நீக்கியதுடன், பல்வேறு அதிரடியான பொருளாதார நடவடிக்கைகளையும் அறிவித்தார். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தது; அதேசமயம், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.இதைக் கண்டித்து அவ்வப்போது நடந்து வந்த போராட்டம், கடந்த 31ம் தேதி முதல் நாடு முழுதும் தீவிரமடைந்துள்ளது. மோசமான ஊழல் நிறைந்த நிர்வாகத்தால் மக்களின் செலவுகள் அதிகரித்து விட்டன. தேர்தல் மற்றும் நீதித் துறைகளிலும் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமானால், 'இந்த அரசு பதவி விலக வேண்டும்' என, 19 கோரிக்கைகளை முன்வைத்து, இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடப்பதால், நைஜீரிய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தலைநகர் அபுஜா, சுலேஜா, லாகோஸ் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள் முதல், பெரியவர்கள் வரை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு மாகாணமான போர்னோவில் போராட்டக்காரர்கள் கூட்டத்தில் குண்டை வெடிக்கச் செய்ததில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைக் கண்டித்து அபுஜாவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது, போலீசார் - பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த உரிமைகள் குழு தெரிவித்துள்ளது இதையடுத்து, போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக நைஜீரிய போலீசார் தெரிவித்தனர்.நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து, போர்னோ உள்ளிட்ட ஐந்து வட மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kulandai kannan
ஆக 04, 2024 21:22

தேர்தலில் தோற்பவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் தான் இந்த பொதுமக்கள் வன்முறை. வங்க தேசத்திலும் இதுதான் நடக்கிறது.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 11:11

டுமீலு நாட்டுல சனங்க இதுமேறி பொங்கிடக்கூடாது ன்றதாலதான் ராமர், திராவிட மாடல், ஹிந்தியில் டிக்கெட்டு, வடமொழி, ஹோமப்புகை இப்படியெல்லாம் உருட்டி, பத்தாததுக்கு சரக்கும் ஊத்திக்கொடுத்து, அதுவும் பத்தலைன்னா மெத் ம் கொடுத்து கிடத்தி வெச்சிருக்கோம் ..... கிக்கிக்கீக்க்கி .....


subramanian
ஆக 04, 2024 10:26

பெட்ரோல் பணம் கொழிக்கும் நாட்டில் அரசியல் வாதிகள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.


pmsamy
ஆக 04, 2024 08:21

நைஜீரியாவுல தைரியமான மக்கள் இருக்கிறாங்க. விலைவாசியை எதிர்த்து கேட்க ஒரு துப்பும் இல்லை இந்தியாவுல


Mani . V
ஆக 04, 2024 06:21

நைஜீரியர்கள் அளவுக்கு தமிழர்கள் சொரணை உள்ளவர்கள் என்று நாம் தவறாக எண்ணி விடக் கூடாது.


Kasimani Baskaran
ஆக 04, 2024 06:14

உலகின் தலைசிறந்த மோசடிகள் நைஜிரியாவில்தான் உற்பத்தியாகிறது. அப்படி இருந்தும் பொருளாதாரம் மோசமாக இருக்கிறது என்றால் அதற்க்கு அயலக அணி கூட காரணமாக இருக்கலாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி