உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய ராணுவத்தில் 45 இந்தியர்கள் மீட்பு:

ரஷ்ய ராணுவத்தில் 45 இந்தியர்கள் மீட்பு:

புதுடில்லி: உக்ரைனுக்கு எதிராக போரில் பங்கேற்பதற்காக ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 45 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீது 2022ல் முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதுவரை இரு தரப்பிலுமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியாவைச் சேரந்தவர்களும் களம் இறக்கப்பட்டதாக புகார் எழுந்தது.கடந்த ஜூலையில் ரஷ்யா சென்றிந்த பிரதமர் மோடி, அதிபர் புடினை சந்தித்து பேசினார்.இதையடுத்து ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்களை விடுவிக்கப்படுவர் என உறுதி அளிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியது, ரஷ்ய ராணுவத்தில் சட்டவிரோதமாக பணியாற்றிய இந்தியர்களில் 45 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 50 பேர் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை