உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட "அப்டேட்"

டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட "அப்டேட்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இது குறித்து, சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,' சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது. நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். சென்னையில் உற்பத்தி ஆலை விரிவாக்கம் குறித்து நைக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வலிமை

திருச்சி, மதுரையில் optum நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. optum நிறுவனம் ஏற்கெனவே சென்னையில் மருத்துவத்துறையில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறது. இதனால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

sundarsvpr
செப் 06, 2024 08:37

அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் அலுவலக நிமித்தமாய் வெளியிடங்கள் வெளிநாடுகள் செல்கின்றனர். அப்போது வெகுமதிகள் கொடுக்கப்படுகின்றன. சால்வைகள் போற்றப்படுகின்றன. இவைகள் அரசை சார்ந்தவை. தனிப்பட்ட முறையில் வழங்கப்படுபவைகள் காசு கொடுத்து வாங்கும் பொருள்கள் தனிப்பட்டவை. நாணயத்தின் இரு பக்கம் ஓன்று அரசு மாற்று ஓன்று மக்கள். அதுபோல் வெகுமதிகள் அரசு வழங்கியது மக்கள் வழங்கியது.


Ramesh Sargam
செப் 05, 2024 19:17

ஆக தமிழகத்தில் ஒரு பெரிய தொழில் புரட்சி நடக்கப்போகிறது. A big industrial revolution is soon going to happen in Tamil Nadu.


Matt P
செப் 07, 2024 20:43

குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் வேலை செய்ய வடநாட்டவர்களை தானே கூட்டி வருவாங்க. அதுவும் பெரும்புரட்சியா தான் இருக்கும்.


venugopal s
செப் 05, 2024 18:56

முதல்வர் சீக்கிரம் தமிழகம் திரும்பி வரவேண்டும், இங்கு சங்கிகளின் புலம்பல் அதிகமாகி விட்டது!


Matt P
செப் 05, 2024 21:34

இன்னும் அமெரிக்காவில பார்க்க வேண்டிய இடங்கள் ரொம்ப இருக்கு. உங்க அண்ணியும் ஆசைப்படுவாங்க இல்லையா? ஒருத்தர் யார் பேச்சையோ கேட்டு கார் பந்தயமாம். இவர் வீட்டுக்காரம்மாவும் ஆசைப்படுறாங்க என்று அமெரிக்கா வந்திருக்காராம்.


xyzabc
செப் 07, 2024 15:11

திரும்பி வந்தால் புது புது பொய்கல் கேட்கலாம்


Barakat Ali
செப் 05, 2024 18:50

... கேள்வி கேட்டா குடும்ப கட்சிக்கு கோபம் வரும்


Amruta Putran
செப் 05, 2024 17:59

In Washington one house rate is minimum 1000000 dollars


என்றும் இந்தியன்
செப் 05, 2024 17:40

இங்கிருக்கும் கம்பெனிக்கு 2016 முதல் அமெரிக்காவில் சென்று ஒப்பந்தம் அதுவும் ரூ 2000 கோடி???அவ்வளவு தான் எடுத்துக்கொண்டு போக முடிந்ததா ஸ்டாலின், துபாய் போல ரூ 6000 கோடி எடுத்துக்கொண்டு போக முடியவில்லையா???


Dharmavaan
செப் 05, 2024 17:23

இதெல்லாம் மக்களை ஏமாற்ற விளம்பரம் உண்மை என்பது இருக்காது


ManiK
செப் 05, 2024 14:54

எடப்பாடி அமெரிக்கா போகும்போது இவ்வளவெல்லாம் கஷடப்படைடு நடிக்கலையே?!... ஐயா ச்டாலின் சின்ன வயசு சினிமா ஆசைய 100% நிறைவேற்றுகிரார்.


manokaransubbia coimbatore
செப் 05, 2024 14:37

இந்த பிஸ்கோத்து 2000 கோடியை ஜெகத்திரட்சகன் எம்பியிடம் கேட்டிருந்தாலே 10000 கோடி என்ன 26000 கோடியே வாங்கியிருக்கலாம் . வீணா அமெரிக்கா போய் கெஞ்சியிருக்க வேண்டாம்.


Sridhar
செப் 05, 2024 14:04

ஒரு நாளைக்கு ஒருமணிநேரம் இந்த மாதிரி மீட்டிங்... அப்புறம் மிச்சநேரமெல்லாம்?? ? இல்ல, இந்த போட்டோக்களெல்லாம் மொத்தமா முன்பே எடுக்கப்பட்டு ஒவ்வொரு நாளைக்கு ஒன்னு வீதம் வெளியிட்டுட்டு இருக்கானுங்களா?


சமீபத்திய செய்தி