உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரம் ரூ.41 கோடி மட்டுமே செலவிட கடிவாளம்

இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரம் ரூ.41 கோடி மட்டுமே செலவிட கடிவாளம்

கொழும்பு,இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவினங்களுக்கு, அந்நாட்டு தேர்தல் கமிஷன் முதன்முறையாக கடிவாளம் போட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக 41 கோடி ரூபாய் மட்டுமே செலவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், வரும் செப்., 21ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு பின் நடக்க உள்ள முதல் அதிபர் தேர்தலான இதில், தற்போது அதிபராக உள்ள ரணில் விக்கரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார்.முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, நீதித்துறை அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்சே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., தலைவர் அனுரா குமரா திசநாயகே.முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் களம் காணப்போவதாக அறிவித்துள்ளனர்.அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இந்நிலையில், வேட்பாளர்களின் செலவுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செலவு தொகையை தேர்தல் கமிஷன் முதன் முறையாக நிர்ணயித்துள்ளது.இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தேர்தல் பிரசாரத்திற்காக, அதிகபட்சமாக 41 கோடி ரூபாய் செலவிடலாம்.நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த தொகையில் வேட்பாளர் 60 சதவீதமும், சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர், 40 சதவீதமும் செலவு செய்ய வேண்டும்.இதேபோல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 21 நாட்களுக்குள் கட்சி சார்பில் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை